Dec 25, 2025 - 04:53 PM -
0
ஹட்டன் - கொழும்பு பிரதான வீதியின் கினிகத்தேனை, கடவல பகுதியில் சீமெந்து ஏற்றிச் சென்ற லொரி ஒன்று 30 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
ஹட்டனில் இருந்து திருகோணமலை நோக்கிச் சென்று கொண்டிருந்த லொரி ஒன்றே நேற்று (24) இரவு 7.00 மணியளவில் இவ்வாறு விபத்துக்குள்ளானது.
குறித்த பகுதியில் உள்ள வளைவு ஒன்றில் திரும்புகையில், வேகத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் வீதியை விட்டு விலகி லொரி பள்ளத்தில் வீழ்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
இந்த விபத்தில் சாரதிக்கோ அல்லது வேறு எவருக்கோ காயங்களோ, உயிரிழப்புகளோ ஏற்படவில்லை. இருப்பினும் லொரிக்கும், அதில் கொண்டு செல்லப்பட்ட சீமெந்து மூடைகளுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கினிகத்தேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
--

