Dec 25, 2025 - 07:13 PM -
0
கம்பஹா பொலிஸ் நிலையத்தின் குற்றத் தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சட்டவிரோத பொருட்கள் கையிருப்பில் வைத்திருந்த நபர் ஒருவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்காமல் இருப்பதற்காக, மூன்று இலட்சம் ரூபாவை இலஞ்சமாகப் பெற்றுக்கொண்ட குற்றச்சாட்டிலேயே இவர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இச்சம்பவம் தொடர்பில் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றது.

