Dec 25, 2025 - 08:05 PM -
0
சில நாட்களுக்கு முன்னர் காணாமல் போயிருந்த இளைஞர் ஒருவரின் சடலம், குளியாப்பிட்டிய தும்மோதர பிரதேசத்திலுள்ள காணியொன்றில் புதைக்கப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த இளைஞர் காணாமல் போய் சுமார் 9 நாட்களின் பின்னரே அவரது சடலம் இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
28 வயதான அந்த இளைஞர் காணாமல் போயுள்ளதாக அவரது உறவினர்களால் குளியாப்பிட்டிய பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
இது தொடர்பான விசாரணைகளை ஆரம்பித்த பொலிஸார், சந்தேகத்தின் பேரில் ஒருவரைக் கைது செய்ததுடன், அவரிடம் நடத்திய விசாரணைகளின் போது சடலம் புதைக்கப்பட்டிருந்த இடம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
வனவிலங்குகளுக்காக இடப்பட்டிருந்த மின்சாரக் கம்பியில் மோதியதால் குறித்த இளைஞர் உயிரிழந்துள்ளதாகவும், அதன் பின்னரே அவர் அவ்விடத்தில் புதைக்கப்பட்டதாகவும் சந்தேக நபர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இச்சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் இரண்டு சந்தேக நபர்களைக் கைது செய்ய வேண்டியுள்ளதாக பொலிஸார் மேலதிகமாகத் தெரிவித்துள்ளனர்.

