Dec 26, 2025 - 03:56 PM -
0
நுகேகொடை, கொஹுவல சந்திப் பகுதியில் அண்மையில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த நபர் உயிரிழந்தார்.
களுபோவில போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
கடந்த 22 ஆம் திகதி நுகேகொடை சந்தி மற்றும் கொஹுவல சந்திக்கு இடைப்பட்ட பகுதியில், மோட்டார் சைக்கிளில் பிரவேசித்த ஒருவர் முச்சக்கரவண்டியில் பயணித்துக் கொண்டிருந்த ஒருவரை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூடு நடத்தியிருந்தார்.
துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த குறித்த நபர் சிகிச்சைக்காக களுபோவில போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், அங்கு சிகிச்சை பெற்று வந்த போதே நேற்று இரவு அவர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
தெஹிவளை பிரதேசத்தைச் சேர்ந்த 26 வயதான ஒருவரே இவ்வாறு உயிரிழந்ததாக குறிப்பிடப்படுகிறது.
சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் இதுவரை கைது செய்யப்படவில்லை.

