Dec 26, 2025 - 04:10 PM -
0
'ஜன நாயகன்' படத்தின் இசை வெளியீட்டு நாளை (27) மலேசியாவில் நடைபெறுகிறது. இந்த விழாவிற்கு ரசிகர்கள் மற்றும் திரைப்பிரபலங்கள் என பலரும் மலேசியாவில் குவிந்த வண்ணம் உள்ளனர். இதன் காரணமாக மலேசியா நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது.
மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் உள்ள புக்கிட் ஜலில் மைதானத்தில் 'ஜன நாயகன்' படத்தின் இசை வெளியீட்டு விழா நாளை நடைபெறுகிறது. இவ்விழாவில் நடிகரும், நடன இயக்குநருமான பிரபுதேவா, இசையமைப்பாளர் அனிருத், இயக்குநர் நெல்சன், பாடகர்கள், எஸ்.பி.பி. சரண், கிரிஷ், ஹரிஷ் ராகவேந்திரா, திப்பு, பாடகிகள் அனுராதா ஸ்ரீராம், சுஜாதா மோகன் ஆகியோர் பங்கேற்கின்றனர்.
இவர்கள் மலேசியாவிற்கு பயணம் மேற்கொள்ளும் வீடியோ தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது. இவர்களை தவிர நடிகர் தனுஷ் உள்ளிட்ட பலரும் மலேசியாவிற்கு பயணம் மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்நிலையில் படத்தின் நாயகன் விஜய், மமீதா பைஜு, இயக்குனர் ஹெச் வினோத், தயாரிப்பாளர், இசையமைப்பாளர் அனிருத் ஆகியோர் மலேசியாவுக்கு சென்றடைந்தனர்.
மலேசியாவுக்கு சென்றடைந்த விஜய்க்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

