செய்திகள்
தலவாக்கலை பிரதேச செயலகம் முன்னால் நபரொருவர் தீக்குளிப்பு

Dec 26, 2025 - 04:45 PM -

0

தலவாக்கலை பிரதேச செயலகம் முன்னால் நபரொருவர் தீக்குளிப்பு

குடும்பத் தகராறு காரணமாக நபர் ஒருவர் தலவாக்கலை பிரதேச செயலகத்திற்கு முன்னால் தனது உடலில் தீ வைத்துக்கொண்டுள்ளார். 

தீ வைத்துக்கொண்டதால் பலத்த காயமடைந்த நபர் லிந்துலை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், மேலதிக சிகிச்சைக்காக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவித்தனர். 

குடும்ப உறவினர்கள் தான் மனநோயால் பாதிக்கப்பட்டவர் என சித்தரித்து, தனது பிள்ளைகளை தன்னிடமிருந்து பிரித்துள்ளதாகக் கடிதம் எழுதி வைத்துவிட்டு அவர் இவ்வாறு உடலில் தீ வைத்துக்கொண்டுள்ளார். 

தனக்கு இழைக்கப்பட்ட அநீதி தொடர்பில் ஹட்டன் பொலிஸிலும் முறைப்பாடு செய்ததாகவும், அந்த முறைப்பாட்டிற்கும் நீதி கிடைக்கவில்லை எனவும் அந்தக் கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. 

சம்பவம் தொடர்பில் தலவாக்கலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Comments
0

MOST READ
01
02
03
04
05