Dec 26, 2025 - 07:13 PM -
0
பிரதான ரயில் மார்க்கத்தில் ரயில் போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
மீரிகம மற்றும் பல்லேவெல ரயில் நிலையங்களுக்கு இடையே ரயில் ஒன்று தடம்புரண்டுள்ளமையே இதற்கு காரணம் என ரயில்வே பிரதான கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக, பிரதான ரயில் மார்க்கத்தில் ரயில்கள் பயணிப்பதில் சிறிய தாமதம் ஏற்படக்கூடும் என அந்த அறை மேலும் குறிப்பிட்டுள்ளது.

