செய்திகள்
லதா வல்பொல காலமானார்

Dec 27, 2025 - 08:18 PM -

0

லதா வல்பொல காலமானார்

சிங்களத் திரையிசையின் 'குயில் என அறியப்படும் லதா வல்பொல இன்று (15) தமது 91 வது வயதில் காலமானார். 

1934 ஆம் ஆண்டு கல்கிசையில் பிறந்த லதா வல்பொல, 1946 ஆம் ஆண்டு தனது 12 ஆவது வயதில் அன்றைய 'ரேடியோ சிலோன்' வானொலியில் தமது முதல் பாடலைப் பாடினார். 

அவர் இதுவரை பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ளார். 

அவற்றில் வெளிநாட்டு மொழிப் பாடல்களும் அடங்குகின்றன. 

1953 ஆம் ஆண்டு 'எதா ரே' திரைப்படத்தின் மூலம் திரைத்துறையில் பின்னணிப் பாடகியாக அறிமுகமான அவர், கடந்த பல தசாப்தங்களாக 600-க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்குத் தமது குரலால் பங்களிப்பு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

1953 ஆம் ஆண்டு 'எதா ரே' திரைப்படத்தின் மூலம் திரைத்துறையில் கால்பதித்த அவர், கடந்த பல தசாப்தங்களாக 600-க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்குத் தமது குரலால் பங்களிப்பு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments
0

MOST READ
01
02
03
04
05