Dec 27, 2025 - 10:35 PM -
0
வெளிநாட்டில் தலைமறைவாகியுள்ள பாரிய போதைப்பொருள் கடத்தல்காரரும், திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடுபவருமான 'ஹீனட்டியன மகேஷின் உதவியாளரான ஜிங்கா என்றழைக்கப்படும் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்புப் பிரிவினரால் முன்னெடுக்கப்பட்ட விசேட விசாரணையின் போதே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரிடம் இருந்து வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட கைத்துப்பாக்கி ஒன்றும், அதன் மெகஸினும், 25 டி-56 ரகத் தோட்டாக்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
இச்சம்பவம் குறித்து மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்புப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

