செய்திகள்
இலங்கைக்கு எதிரான பாகிஸ்தான் குழாம் அறிவிப்பு

Dec 28, 2025 - 03:25 PM -

0

இலங்கைக்கு எதிரான பாகிஸ்தான் குழாம் அறிவிப்பு

இலங்கை அணிக்கு எதிரான இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணியின் பல முன்னணி வீரர்கள் பங்கேற்க மாட்டார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அவர்கள் அவுஸ்திரேலியாவின் 'பிக் பேஷ்' (Big Bash) தொடரில் பங்கேற்றுள்ளமையே இதற்கு காரணமாகும். 

அதன்படி, பாபர் அசாம், ஷஹீன் அப்ரிடி, ஹரிஸ் ரவூப் மற்றும் முகமது ரிஸ்வான் ஆகியோர் இந்த இலங்கை சுற்றுப்பயணத்தில் இணையமாட்டார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதன் காரணமாக, அறிமுக வீரரான கவாஜா நஃபாய், இலங்கைக்கு எதிரான இருபதுக்கு 20 தொடருக்காக அறிவிக்கப்பட்டுள்ள 15 பேர் கொண்ட பாகிஸ்தான் குழாமில் சேர்க்கப்பட்டுள்ளார். 

பாகிஸ்தான் குழாமின் விபரம்: 

சல்மான் அலி ஆகா (தலைவர்), அப்துல் சமத், அப்ரார் அகமது, பஹீம் அஷ்ரப், பகார் சமான், கவாஜா நஃபாய், முகமது நவாஸ், முகமது சல்மான் மிர்சா, முகமது வசீம் ஜூனியர், நசீம் ஷா, சாஹிப்ஸாதா பர்ஹான், சைம் அயூப், ஷதாப் கான், உஸ்மான் கான், உஸ்மான் தாரிக். 

இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகளைக் கொண்ட இருபதுக்கு 20 தொடரின் முதலாவது போட்டி ஜனவரி மாதம் 07 ஆம் திகதி தம்புள்ளையில் நடைபெறவுள்ளது.

Comments
0

MOST READ
01
02
03
04
05