Dec 29, 2025 - 07:04 AM -
0
உக்ரைன்-ரஷியா இடையே போர் நீடித்து வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.
இந்த போரில் உக்ரைனுக்கு அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள் ஆதரவு அளித்து வருகின்றன.
அதேவேளையில், போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் முயற்சித்து வருகிறார்.
அதன்படி, போர் நிறுத்தம் தொடர்பாக 20 நிபந்தனைகள் கொண்ட உடன்படிக்கையை டிரம்ப் முன்மொழிந்துள்ளார்.
இந்த நிபந்தனைகளை ஏற்றுக்கொள்வது தொடர்பாக உக்ரைன்-அமெரிக்க அதிகாரிகளுக்கு இடையே பேச்சுவார்த்தை நடந்தது.
நீண்ட இழுபறிக்கு பின் உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி பெரும்பாலான நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டார்.
இந்த சூழலில் அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்பை இன்று ஜெலென்ஸ்கி சந்தித்தார்.
அந்த சந்திப்பின் போது பொருளாதார ஒப்பந்தம் குறித்து விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனிடையே ஜெலென்ஸ்கி உடனான சந்திப்புக்கு முன் ரஷிய ஜனாதிபதி புடினுடன் டிரம்ப் தொலைபேசியில் உரையாடியிருந்ததார்.
இதனைத்தொடர்ந்து செய்தியாளர்கள் சந்திப்பில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கூறுகையில், “நாங்கள் (ஜெலென்ஸ்கியுடன்) ஒரு சிறந்த சந்திப்பை நடத்தினோம்.
நாங்கள் நிறைய விஷயங்களைப் பற்றி விவாதித்தோம். உங்களுக்குத் தெரியும், புடினுடனான தொலைபேசி அழைப்பு சிறந்ததாக இருந்தது.
அது இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்தது. நாங்கள் நிறைய விஷயங்களைப் பற்றி விவாதித்தோம். நாங்கள் மிகவும் நெருக்கமாகி வருகிறோம் என்று நினைக்கிறேன்.
புடினும், நானும் இப்போதுதான் ஐரோப்பிய தலைவர்களிடம் பேசினோம்... அந்தப் போரை முடிவுக்குக் கொண்டுவருவதில் நாங்கள் நிறைய முன்னேற்றம் அடைந்துள்ளோம், இது இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு நடந்த மிகக் கொடிய போராக இருக்கலாம்” என்று தெரிவித்தார்.

