Dec 29, 2025 - 10:36 AM -
0
புத்தளம் ரயில் மார்க்கத்தில் கொழும்பு கோட்டை மற்றும் சிலாபம் இடையிலான ரயில் சேவைகள் இன்று (29) முதல் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
பாதிக்கப்பட்டிருந்த ரயில் மார்க்கத்தின் திருத்தப் பணிகள் நிறைவடைந்துள்ளதையடுத்து, ரயில் சேவைகள் இவ்வாறு மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
கடந்த நவம்பர் மாத இறுதியில் இலங்கையில் ஏற்பட்ட சீரற்ற வானிலை காரணமாக, புத்தளம் ரயில் மார்க்கத்தில் குடாவெவ மற்றும் மாதம்பே ரயில் நிலையங்களுக்கு இடையே அமைந்துள்ள கடுபிட்டி ஓயா பாலத்திற்கு அருகில் ரயில் பாதை நீரில் அடித்துச் செல்லப்பட்டது.
இதன் காரணமாக கொழும்பு கோட்டை மற்றும் சிலாபம் / புத்தளம் இடையிலான ரயில் போக்குவரத்து ஸ்தம்பித்திருந்தது.
இதன் விளைவாக, சிலாபம் ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 5 ரயில் பெட்டிகளை (Train Sets) போக்குவரத்துக்காகப் பயன்படுத்த முடியாமல் போனதுடன், அந்த மார்க்கத்தின் ரயில் சேவைகள் நாத்தாண்டியா ரயில் நிலையம் வரை மாத்திரமே மட்டுப்படுத்தப்பட்டிருந்தது.
கொழும்பு கோட்டை மற்றும் சிலாபம் இடையே காலை மற்றும் மாலை வேளைகளில் இயக்கப்படவுள்ள அலுவலக ரயில்கள் பின்வருமாறு:

