வணிகம்
‘தீவா குடும்பத்தின் அதிர்ஷ்டம்’ மாபெரும் நுகர்வோர் ஊக்குவிப்புத் திட்ட மாபெரும் பரிசான TOYOTA WiGO வெற்றியாளரை அறிவித்த தீவா

Dec 29, 2025 - 10:56 AM -

0

‘தீவா குடும்பத்தின் அதிர்ஷ்டம்’ மாபெரும் நுகர்வோர் ஊக்குவிப்புத் திட்ட மாபெரும் பரிசான TOYOTA WiGO வெற்றியாளரை அறிவித்த தீவா

20 ஆண்டுகளுக்கும் மேலான வரலாற்றைக் கொண்ட, இலங்கையின் மிகவும் நம்பகமான சலவைத் தூள் வர்த்தகநாமங்களில் ஒன்றான தீவா (Diva), தனது ‘தீவா குடும்பத்தின் அதிர்ஷ்டம்’ மாபெரும் நுகர்வோர் ஊக்குவிப்புத் திட்டத்தை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. இதன் மாபெரும் பரிசான புதிய TOYOTA WiGO காரினை, பொலன்னறுவையைச் சேர்ந்த யு.பி. சமன் உதய குமாரா பெற்றுக் கொண்டார். இந்த ஊக்குவிப்புத் திட்டத்தின் இறுதிப் பரிசுக்குலுக்கல் 2025 ஒக்டோபர் 28ஆம் திகதி இடம்பெற்றதோடு, 2025 நவம்பர் 07ஆம் திகதி வத்தளையில் உள்ள டொயோட்டா லங்கா காட்சியறையில் வைத்து அது கையளிக்கப்பட்டது. இந்த 3 மாத கால ஊக்குவிப்புத் திட்ட காலத்தில் 1,100 இற்கும் மேற்பட்ட பரிசுகளை வழங்கிய இந்த வெற்றிகரமான பிரசாரத்தின் நிறைவாக இந்நிகழ்வு அமைந்திருந்தது. 

இவ்வர்த்தகநாமத்தின் மீதான வாடிக்கையாளர்களது நீண்டகால நம்பிக்கையையும் ஆதரவையும் பாராட்டுவதற்காக தீவாவின் விசுவாசமான நுகர்வோரை கௌரவப்படுத்தும் வகையில் ‘தீவா குடும்பத்தின் அதிர்ஷ்டம்’ மாபெரும் நுகர்வோர் ஊக்குவிப்புத் திட்டமானது முன்னெடுக்கப்பட்டிருந்தது. இந்த ஊக்குவிப்பு பிரசாரத்தின் போது, குடும்பங்களுக்கு ஆதரவளிக்கவும் அவர்களை மேம்படுத்தும் நோக்குடனும், ஆயிரம் பேருக்கும் அதிகமான பங்கேற்பாளர்களுக்கு சலவை இயந்திரங்கள், தொலைக்காட்சிப் பெட்டிகள், மடிகணனிகள், ஸ்மார்ட் கையடக்கத் தொலைபேசிகள், குடும்பத்திற்கான சுற்றுலா பொதிகள், மின் அழுத்திகள், கையடக்கத் தொலைபேசி ரீலோட்கள் உள்ளிட்ட மதிப்பு வாய்ந்த பரிசுகளுடன், இதன் உச்ச கட்டமாக ஒட்டுமொத்த குடும்பத்திற்குமான வாகனமான TOYOTA WiGO மாபெரும் பரிசும் வழங்கப்பட்டன. 

Hemas Consumer Brands நிறுவனத்தின் சந்தைப்படுத்தல் பணிப்பாளர் ஷியான் ஜயவீர, தீவாவிற்கும் அதன் நுகர்வோருக்கும் இடையிலான நீடித்த உறவு குறித்து பெருமை அடைவதாக தெரிவித்தார். அவர் மேலும் கருத்து வெளியிடுகையில், “புத்தாக்கம் மற்றும் பெறுமதி உருவாக்கத்தின் மூலம் உயர் தரத்தை வழங்குவதற்கான தமது வாக்குறுதியில் தீவா எப்போதும் உறுதியாக இருந்து வந்துள்ளது. எமது வெற்றியானது, கடந்த 20 வருடங்களாக எமது நுகர்வோரின் நம்பிக்கையையும் விசுவாசத்தையும் வெற்றி கொண்டதனை அடிப்படையாகக் கொண்டதாகும். இந்த உறவு தொடர்ச்சியாக எமக்கு ஊக்கமளித்து வருகிறது. இந்தப் பயணம் முழுவதும் எமக்கு ஆதரவளித்த எமது நுகர்வோருக்கான கௌரவிப்பாக, தீவா குடும்பத்தின் அதிர்ஷ்டம் நுகர்வோர் ஊக்குவிப்புத் திட்டம் அமைகின்றது. TOYOTA WiGO எனும் பிரதான பரிசை வென்ற பொலன்னறுவையைச் சேர்ந்த சமன் உதயகுமார உள்ளிட்ட, 1,000 இற்கும் மேற்பட்ட வெற்றியாளர்களுக்கும் எனது வாழ்த்துகளை தெரிவிப்பதோடு, பங்கேற்ற அனைவருக்கும் எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். தீவாவின் மேலும் உற்சாகமான புத்தாக்க திட்டங்களை தொடர்ந்தும் எதிர்பார்க்குமாறு எமது நுகர்வோருக்கு நாம் அழைப்பு விடுக்கிறோம்.” என்றார். 

இரு நிறுவனங்களுக்கும் இடையிலான இந்த கூட்டாண்மையை பாராட்டி கருத்து வெளியிட்ட TOYOTA Lanka (Pvt) Ltd. நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளரும் அதன் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான மனோகர அத்துகோரள, “பெறுமதியையும், நம்பிக்கையையும் தொடர்ச்சியாக வழங்கும் இரண்டு வர்த்தகநாமங்களை ஒன்றிணைக்கும் இந்த நாடு தழுவிய ஊக்குவிப்புத் திட்டத்தில் தீவா நிறுவனத்துடன் ஒன்றிணைந்தமை ஒரு பாக்கியமாகும். பிரதான பரிசை வென்ற எமது வெற்றியாளரான உதய குமாராவிற்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். அத்துடன், அவரது புதிய TOYOTA WiGO மூலம், மகிழ்ச்சியான மற்றும் பாதுகாப்பான பயணங்களை மேற்கொள்ள அவரை வாழ்த்துகிறேன்.” என்றார். 

தனது புதிய TOYOTA WiGO காரில் வீட்டிற்குச் சென்ற பிரதான பரிசை வென்ற யு.பி. சமன் உதய குமார, இது குறித்து தனது நன்றியைத் தெரிவித்ததோடு, உற்சாகத்தையும் வெளிப்படுத்தினார். “இந்த அற்புதமான பரிசை வென்றமை தொடர்பில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். நான் உண்மையில் வெற்றி பெறுவேன் என நினைக்கவே இல்லை. போட்டியில் நுழைய என்னை ஊக்குவித்தது எனது மனைவி தான். நான் எனது பெயரில் விண்ணப்பத்தைச் சமர்ப்பித்திருந்தாலும், அது உண்மையில் அவரது யோசனையாகும். இந்த அனுபவம் நம்ப முடியாததாகும். இந்த நம்பமுடியாத வெகுமதிக்காக தீவா நிறுவனத்திற்கு எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.” என்றார். 

‘தீவா குடும்பத்தின் அதிர்ஷ்டம்’ மாபெரும் நுகர்வோர் ஊக்குவிப்புத் திட்டம் போன்ற முயற்சிகள் மூலம், தீவா இத்துறையின் புத்தாக்குநராகவும், நம்பகமான குடும்பப் பெயராகவும் தனது பெயரை மீண்டும் நிலைநிறுத்தியுள்ளது. நுகர்வோருக்கு சிறந்ததை வழங்குவதற்கான தனது வாக்குறுதியை இவ்வர்த்தகநாமம் தொடர்ந்து நிறைவேற்றி வருகிறது. தனது பெருமைமிக்க 20 வருடத்திற்கும் அதிகமான தரம் மற்றும் பராமரிப்பின் பாரம்பரியத்துடன் தீவா தொடர்ச்சியாக முன்னணியில் நின்று செயற்பட்டு வருகிறது. அந்த வகையில் தீவா சலவைத் தூளானது, பத்தோடு பதினொன்றாக அல்லாமல், தமது வாடிக்கையாளர்களை உண்மையாகப் புரிந்துகொள்ளும் ஒரு வர்த்தகநாமம் என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது. 

Hemas Consumer Brands பற்றி 

60 வருடங்களாக வீடு மற்றும் தனிநபர் பராமரிப்புத் தயாரிப்புகளின் இலங்கையின் முன்னணி உற்பத்தியாளரான Hemas Consumer Brands, குடும்பங்கள் சிறந்த நாளைய தினத்தை அனுபவிப்பதற்கு வலுவூட்டுவதில் கவனம் செலுத்துகிறது. வாடிக்கையாளர்களை மையமாகக் கொண்ட முன்மொழிவுகளில் புத்தாக்கத்தை ஏற்படுத்தவும், மேம்படுத்தவும் உள்ளூர் தகவல் தரவுகளைப் பயன்படுத்துவதில் பெருமை கொள்கிறது. இது இலங்கையில் நம்பகமான வீட்டுப் பெயர் வர்த்தக நாமமாக தன்னை நிறுவுதல் எனும் அவர்களது நோக்கத்தை அடைய உதவியுள்ளது. இலங்கையின் நுகர்வோர் பற்றிய ஆழமான புரிதல் மற்றும் அதன் தயாரிப்புகளில் உயர் தரம் மற்றும் பெறுமதியை வழங்குவதற்கான அசைக்க முடியாத அர்ப்பணிப்பினால் உந்தப்பட்டுள்ள Hemas Consumer Brands, நாடு முழுவதும் உள்ள சமூகங்களின் வாழ்க்கையை தொடர்ச்சியாக வளப்படுத்துகிறது.

Comments
0

MOST READ
01
02
03
04
05