Dec 29, 2025 - 11:01 AM -
0
WealthTrust Securities Limited (WTS) நிறுவனம் ஆரம்பித்த சாதாரண, வாக்குரிமைப் பங்குகளைக் கொண்ட ஆரம்ப பொதுப் பங்கு வழங்கல் நடவடிக்கையானது முதலீட்டாளர்கள் மத்தியில் வலுவான மற்றும் பரந்த அடிப்படையிலான கேள்வியைத் தோற்றுவித்துள்ளது. பங்கு வழங்கல் நடவடிக்கையின் தகவல் விபர ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அளவுக்கதிகமான விண்ணப்பங்கள் கிடைக்கப்பெறும் நிலையில் முற்கூட்டியே வழங்கல் நடவடிக்கையை இடைநிறுத்த அனுமதிக்கும் சரத்துக்கு அமைவாக, 2025 டிசம்பர் 17 அன்று இந்த வழங்கல் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்ட போது, அளவுக்கு அதிகமான விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றமை காரணமாக, அதே தினத்தன்று மாலை 4.30 மணிக்கு வழங்கல் நடவடிக்கையை இடைநிறுத்த வேண்டி ஏற்பட்டது.
WTS ஆரம்ப பொதுப் பங்கு வழங்கல் நடவடிக்கையின் போது ரூபா 7.5 பில்லியன் மதிப்புடைய விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றதுடன், 14.9 மடங்குகளால் அதிக விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. பங்கொன்று ரூபா 7.00 என்ற விலைமதிப்பில் மொத்தமாக 71,548,244 சாதாரண, வாக்குரிமைப் பங்குகள் வழங்கப்பட்டதுடன், இதன் மூலமாக ரூபா 500,837,708 தொகையைத் திரட்டி, இணக்கப்பாடு மற்றும் உரிய தேவைப்பாடுகளுக்கு அமைவாக. கொழும்பு பங்குச் சந்தையின் திரி சவி பலகையில் நிரற்படுத்தும் முயற்சியில் இந்நிறுவனம் இறங்கியுள்ளது.
நிறுவனத்தின் சார்பில் நன்றியை வெளிப்படுத்தி கருத்து தெரிவித்த WealthTrust Securities Limited நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர்/பிரதம நிறைவேற்று அதிகாரி திரு. றொமேஷ் கோமஸ் அவர்கள், “WealthTrust Securities நிறுவனத்தைப் பொறுத்தவரையில் இது ஒரு திருப்புமுனையான தருணமாக மாறியுள்ளதுடன், பங்குதாரர்களாக மாறி, எம்மீது நம்பிக்கை வைத்துள்ள முதலீட்டாளர்கள் அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம். இதற்கு கிடைக்கப்பெற்ற பலத்த வரவேற்பை நாம் பணிவுடன் ஏற்றுக்கொள்வதுடன், விண்ணப்பித்தவர்கள் அனைவரினதும் முழுமையான விண்ணப்பங்களை எம்மால் நிறைவேற்ற முடியாமல் போனமையையிட்டு மனம் வருந்துகிறோம். எம்மால் குறிப்பிடப்பட்ட நோக்கங்களை நிறைவேற்றி, எமது மூலதன காப்பு மட்டங்களை வலுப்படுத்தி, மற்றும் பங்குதாரர்கள் அனைவருக்கும் நீண்ட கால மதிப்பைத் தோற்றுவிப்பதில் நாம் தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் உழைப்போம்.”
இந்த ஆரம்ப பொதுப் பங்கு வழங்கல் குறித்த மேலதிக விபரங்களை www.wealthtrust.lk மூலமாக அறிந்து கொள்ள முடியும்.

