Dec 29, 2025 - 11:10 AM -
0
நியூசிலாந்து அணியின் சகலதுறை வீரர் டக் பிரேஸ்வெல் (Doug Bracewell) சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறத் தீர்மானித்துள்ளார்.
எலும்பு தொடர்பான உபாதை (Bone injury) காரணமாக அவர் இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
டக் பிரேஸ்வெல் 28 டெஸ்ட் போட்டிகள், 21 ஒருநாள் போட்டிகள் மற்றும் 20, இருபதுக்கு-20 போட்டிகளில் விளையாடியுள்ளார்.
அவர் டெஸ்ட் போட்டிகளில் 74 விக்கெட்டுகளையும் ஒருநாள் போட்டிகளில் 46 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

