Dec 29, 2025 - 12:09 PM -
0
4 ஆவது எஸ்.ஏ. லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தென்ஆப்பிரிக்காவில் இடம்பெற்றுவருகிறது. இதில் பங்கேற்றுள்ள 6 அணிகள் தங்களுக்குள் தலா 2 முறை மோதுகின்றன. லீக் முடிவில் டாப்4 இடங்களை பிடிக்கும் அணிகள் 'பிளே-ஆப்' சுற்றுக்கு தகுதி பெறும்.
இந்த நிலையில் பார்ல் நகரில் நடந்த 3 ஆவது லீக்கில் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி, பார்ல் ராயல்சை எதிர்கொண்டது. இதில் முதலில் துடுப்பெடுத்தாடிய சன்ரைசர்ஸ் அணி 4 விக்கெட்டுக்கு 186 ஓட்டங்களை பெற்றது. அதிகபட்சமாக ஜோர்டான் ஹெர்மேன் 62 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.
187 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய டேவிட் மில்லர் தலைமையிலான பார்ல் ராயல்ஸ் அணி, 11.5 ஓவர்களில் 49 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.
எஸ்.ஏ. கிரிக்கெட் வரலாற்றில் ஒரு அணி பெற்றுக்கொண்ட குறைந்த ஓட்டங்களே இதுவாகும். இதற்கு முன்பு கடந்த ஆண்டில் பிரிட்டோாரியா கேப்பிட்டல்ஸ் அணி, சன்ரைசர்சுக்கு எதிராக 52 ஓட்டங்களை பெற்றதே சாதனையாக இருந்தமை குறிப்பிடத்தக்கது.

