செய்திகள்
பழம்பெரும் பாடகி லதா வல்பொலவின் பூதவுடலுக்கு இன்றும் அஞ்சலி

Dec 29, 2025 - 01:16 PM -

0

பழம்பெரும் பாடகி லதா வல்பொலவின் பூதவுடலுக்கு இன்றும் அஞ்சலி

காலமான இலங்கையின் பழம்பெரும் சிங்கள பாடகி லதா வல்பொலவின் பூதவுடல், இறுதி அஞ்சலிக்காக பொரளையிலுள்ள தனியார் மலர்ச்சாலையில் இன்றும் (29) வைக்கப்பட்டுள்ளது. 

நேற்று (28) பிற்பகல் முதல் இதுவரையான காலப்பகுதியில் பெருமளவிலானோர் அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக வருகை தருவதை அவதானிக்க முடிகிறது. 

லதா வல்பொலவின் பூதவுடல் மீதான இறுதிக்கிரியைகள் பூரண அரச மரியாதையுடன் எதிர்வரும் 31ஆம் திகதி புதன்கிழமை நடைபெறவுள்ளன. 

ஹெலவின் கீத கோகிலா எனப் போற்றப்படும் கலாசூரி லதா வல்பொல, ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த சனிக்கிழமை காலமானார். அவர் காலமான போது அவருக்கு வயது 91 ஆகும். 

பொதுமக்களின் அஞ்சலிக்காக அவரது பூதவுடல் நேற்று பிற்பகல் பொரளையிலுள்ள தனியார் மலர்ச்சாலையில் வைக்கப்பட்டது. 

இதற்கமைய நேற்று பிற்பகல் 4.00 மணி முதல் கலைஞர்கள், அரசியல்வாதிகள் உள்ளிட்ட பெருமளவிலானோர் அஞ்சலி செலுத்த வருகை தந்தனர். 

இன்றும் காலை 10.00 மணி முதல் அவரது பூதவுடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்துவதற்கு மக்களுக்குச் சந்தர்ப்பம் வழங்கப்பட்டிருந்தது.

Comments
0

MOST READ
01
02
03
04
05