Dec 29, 2025 - 02:10 PM -
0
சமீபத்தில் இலங்கையை உலுக்கிய டித்வா புயல் காரணமாக சமூகங்கள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் பேரழிவுகளை சந்தித்துள்ள நிலையில், மக்களுக்கு அவசியமான தொலைதொடர்பாடல் சேவைகளை தங்குதடையின்றி வழங்குவது தொலைதொடர்பாடல் சேவை வழங்குனர்களுக்கு சோதனை மிக்க ஒரு தருணமாக அமைந்தது என்று கூற முடியும். தொலைதொடர்பாடல் துறையைப் பொறுத்த வரையில் காலத்திற்கு காலம் பல்வேறு சவால்கள் எழுந்துள்ள சூழ்நிலையிலும், எடிசலாட் நிறுவனத்தை தன்னகப்படுத்திய ஹட்ச், அன்று முதல் படிப்படியாக தனது வலையமைப்பை பலப்படுத்தி வந்துள்ளது. டிஜிட்டல் துறையில் காணப்படும் இடைவெளியைப் போக்கி, இலங்கையில் டிஜிட்டல் பொருளாதாரத்தை வளர்ப்பதற்கு உதவி, வாடிக்கையாளர்களுக்கு சிறந்த அனுபவங்களை வழங்குவதில் அவர்களுடைய நம்பிக்கையை வென்றெடுத்துள்ளது.
அந்த வகையில் எந்த சூழ்நிலைக்கும் சிறப்பாக முகங்கொடுக்கும் ஆற்றலுடன், நாட்டிலுள்ள அதிநவீன தொலைதொடர்பாடல் சேவை வலையமைப்புக்களில் ஒன்றாக ஹட்ச் தொடர்ந்தும் சிறப்பாகச் செயற்பட்டு வருகின்றது. ஹட்ச் கட்டியெழுப்பியுள்ள, உச்சத்திறன் கொண்ட ஃபைபர் தொழில்நுட்பம் மற்றும் வானலை வழியான தங்குதடையின்றிய இணைப்பு ஆகியன அதன் தொலைதொடர்பாடல் சேவையின் தனித்துவமாகக் காணப்படுகின்றன. அதன் பலனாக, அனர்த்தம் இடம்பெற்ற வேளையில் இடைவிடாத தொடர்பாடல், அனர்த்தம் குறித்த முக்கிய எச்சரிக்கை அறிவிப்புக்கள், தமது உறவுகளுக்கு என்ன நேர்ந்து விட்டதோ என அஞ்சியவர்கள் தமது உறவுகளை தொடர்புகொள்வதற்கு வேண்டிய அத்தியாவசியமான தொலைதொடர்பாடல் சேவையை அவர்கள் பெற்றுக்கொள்வதை ஹட்ச் உறுதி செய்திருந்தது.
உலகளாவில் 11 நாடுகளில் தனது தொலைதொடர்பாடல் சேவைகளை வழங்கி சக்திவாய்ந்த நிறுவனமாகத் திகழ்ந்து வருகின்ற CK Hutchison Holdings ன் பக்கபலமானது இத்தகைய அனர்த்தங்கள் இடம்பெறும் போதெல்லாம் அதற்குரிய நடவடிக்கைகளை விரைவாகவும், திறன் மிக்க வழியிலும் முன்னெடுப்பதற்கு ஹட்ச் ஸ்ரீலங்கா நிறுவனத்திற்கு கைகொடுத்து வருகின்றது. சேவைகளில் இடையூறுகள் ஏற்பட்ட சில பிரதேசங்களுக்கு விசேட ஹெலிகொப்டர்கள் மூலமாக பொறியியல் தொழில்நுட்ப அணி வைக்கப்பட்டு, சீர்செய்யப்பட்டு சேவைகள் அனைத்தும் உடனடியாக சரிசெய்யப்பட்டன. அனர்த்த நிலைமைகளின் போது தொலைதொடர்பாடல் சேவையின் முக்கியத்துவத்தை உணர்ந்த அணிகள் சேவைகள் தொடர்ந்தும் தங்குதடையின்றி கிடைக்கப்பெறுவதை உறுதி செய்வதில் அயராத உழைப்பைக் காண்பித்தன.
அனர்த்தத்தின் போது மக்கள் மத்தியில் தொலைதொடர்பாடல் சேவை தொடர்ந்தும் கிடைக்கப்பெறுவதை உறுதி செய்வதற்கு முன்னுரிமையளிக்கப்பட்டதுடன், அதற்கு உதவியாக வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் இலவசமாக அழைப்புக்களை மேற்கொள்ளவும், குறுஞ்செய்தி தகவல் பரிமாற்றத்திற்கும், மற்றும் டேட்டா இணைப்பைக் கொண்டிருப்பதற்கும் வாய்ப்பளிப்பது உள்ளிட்ட பல்வேறு நிவாரண முயற்சிகளை ஹட்ச் நிறுவனம் உடனடியாக மேற்கொண்டது. மூன்று வாரங்கள் கடந்தும் அவை வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. நிலுவையாகவுள்ள கொடுப்பனவுகளை உரிய நேரத்தில் செலுத்த தவறிய வர்த்தக வாடிக்கையாளர்களும் சேவைகளை தொடர்ந்து பெற்றுக்கொள்வதற்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. புதிதாக இணைந்து கொள்ள விரும்புகின்றவர்களுக்கு, இணைந்து கொள்வதற்கான கட்டணங்கள் ஏதுமின்றி eSIM வழிமுறையில் உடனடியாக இணைந்து கொள்வதற்கும் வாய்ப்பளிக்கப்பட்டது.
வாடிக்கையாளர்கள் தாம் எங்கிருந்தாலும் டிஜிட்டல் வழியாக தமது தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள வாய்ப்பளித்து. கட்டணங்களை செலுத்துவது மற்றும் ரீலோட் செய்வது போன்றவற்றுக்கு விசேட ஊக்குவிப்புச் சலுகைகள் வழங்கப்பட்டதன் காரணமாக, பலரும் முதல்முறையாக டிஜிட்டல் அனுபவத்தைப் பெற்றுக்கொள்ள வழிவகுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
தொலைதொடர்பாடல் சேவைகளை வழங்கியமைக்குப் புறம்பாக, மேலும் பல்வேறுபட்ட உதவிகளையும் ஹட்ச் நிறுவனம் அனர்த்தத்தின் போது வழங்கியுள்ளது. தமது இருப்பிடங்களை விட்டு வெளியேறி தற்காலிகமாக வேறு இடங்களில் தஞ்சம் புகுந்தோர் மற்றும் மின் இணைப்பு துண்டிக்கப்பட்ட பிரதேசங்களிலுள்ள மக்கள் தமது கைப்பேசிகளை சார்ஜ் செய்து கொள்ள வசதியாக, சூரிய மின்சக்தியின் துணையுடன் இயங்கும் சார்ஜ் வசதிகளை ஹட்ச் ஏற்பாடு செய்திருந்தது. தனியார் துறைக்கு முன்னுதாரணமாக ரூபா 60 மில்லியன் தொகையை ‘இலங்கையை மீளக் கட்டியெழுப்புவோம் நிதியத்திற்கு’ பங்களிப்புச் செய்துள்ளது. இது வரையில் வர்த்தக நிறுவனங்கள் வழங்கியுள்ள பங்களிப்புக்கள் மத்தியில் கூடிய தொகை கொண்ட பங்களிப்புக்களில் ஒன்றாக இது காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
ஹட்ச் நிறுவனத்தின் பிரதம தொழில்நுட்ப மற்றும் தகவல் அதிகாரி அசங்க ரணசிங்க அவர்கள் இம்முயற்சி குறித்து கருத்து வெளியிடுகையில், “தேவைகளுக்கேற்றவாறு உரிய நடவடிக்கைகளை உடனடியாக முன்னெடுத்து, அனர்த்தம் ஏற்பட்ட வேளையில் எமது வாடிக்கையாளர்களும், நாடும் தொலைதொடர்பாடல் வசதிகளை இடைவிடாது பெற்றுக்கொள்வதை நாம் உறுதி செய்துள்ளோம். அனர்த்தத்திலிருந்து மீண்டு, அவர்கள் தமது வாழ்வுகளை மீளக் கட்டியெழுப்புவதற்கு உதவுவதற்காக களத்திலும், செயல்பாடுகளை நிர்வகிப்பதிலும் எமது அணிகள் அர்ப்பணிப்புடன் அயராது உழைத்துள்ளன.” இலங்கையை மீளக் கட்டியெழுப்புவதற்கும், அதன் நீண்ட கால அடிப்படையிலான அபிவிருத்திக்கும் காத்திரமான பங்களிப்பை வழங்கி, எந்த சூழ்நிலையையும் சமாளிக்கும் ஆற்றல் மற்றும் வாடிக்கையாளர்களை முன்னிலைப்படுத்திய தீர்மானங்கள் போன்றவற்றில் தனது அர்ப்பணிப்பை இத்தகைய முயற்சிகள் மூலமாக ஹட்ச் தொடர்ந்தும் சிறப்பாக காண்பித்து வருகின்றது.

