Dec 29, 2025 - 02:49 PM -
0
நைன்வெல்ஸ் வைத்தியசாலை (Ninewells Hospital), அனைத்து வகையான கண் மருத்துவ சேவைகளையும் ஒரே கூரையின் கீழ் வழங்கும் அதிநவீன மற்றும் முழுமையாக ஒருங்கிணைந்த கண் பராமரிப்பு மையமான ‘Ninewells Eye’ (நைன்வெல்ஸ் ஐ) பிரிவை பெருமையுடன் அறிமுகப்படுத்துகிறது. வசதியும் வினைத்திறனையும் முன்னிலைப்படுத்தி வடிவமைக்கப்பட்டுள்ள இந்த மையமானது, பெரியவர்கள் மற்றும் சிறுவர்கள் ஆகிய இரு தரப்பினருக்குமான வெளிநோயாளர் பராமரிப்பு சேவை, மேம்பட்ட நோய் கண்டறிதல் சோதனைகள், அறுவை சிகிச்சை, கண்பார்வை தொடர்பான சேவைகள் (Optical services) மற்றும் மருந்தகம் ஆகியவற்றை ஒரே தளத்தில் கொண்டுள்ளது. இதனால் குடும்பத்தின் அனைத்து உறுப்பினர்களும் ஒரே இடத்தில், குறைந்த நேரத்தில், எந்தத் தடையுமின்றி, எளிதும் உயர்தரமுமான சேவையை உறுதி செய்கிறது.
‘நைன்வெல்ஸ் ஐ‘ மையமானது, புதிதாக நிர்மாணிக்கப்பட்ட இரண்டு பிரத்தியேக கண் அறுவை சிகிச்சை கூடங்களைக் கொண்டுள்ளது. இவை நவீன கண்புரை அறுவை சிகிச்சை (Cataract surgery) உள்ளிட்ட மேம்பட்ட நடைமுறைகளை மிக உயர்ந்த பாதுகாப்புடனும் துல்லியத் தன்மையுடனும் மேற்கொள்வதற்குத் தேவையான அதிநவீன தொழில்நுட்பங்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ளன. OCT, பார்வைப்புல பரிசோதனை மற்றும் லேசர் சிகிச்சைகள் (laser treatments) போன்ற மேம்பட்ட நோய் கண்டறிதல் வசதிகள் மூலம் துல்லியமான நோயறிதல் உறுதி செய்வதுடன் விரைவாக குணமடையக்கூடிய, குறைந்த ஊடுருவல் கொண்ட பராமரிப்பிற்கும் வழிவகுக்கின்றன.
நோயாளிகள் அனுபவம் வாய்ந்த கண் மருத்துவ நிபுணர்களின் ஆலோசனைகள், தனிப்பயனாக்கப்பட்ட சிகிச்சைத் திட்டங்கள் மற்றும் கண் பரிசோதனை, மூக்குக்கண்ணாடி வில்லைகள் மற்றும் அதற்கான ஃபிரேம்கள் உள்ளிட்ட பார்வைக் குறைபாடு தொடர்பான முழுமையான தீர்வுகளை ஒரே இடத்தில் பெற்றுக்கொள்ள முடியும். வைத்தியசாலை அனுமதி முதல் அறுவை சிகிச்சை மற்றும் வீடு திரும்புதல் வரை அனைத்தும் ஒரே தளத்தில் மேற்கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த மையத்தின் தனித்துவமான செயன்முறையானது, இலங்கையிலேயே இத்தகைய ஒருங்கிணைந்த கண் பராமரிப்பு மையங்களில் முதன்மையானதாக அமைகிறது. அறுவை சிகிச்சையின் போது நோயாளிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் வசதியை மேம்படுத்தும் வகையில் ஒரு பிரத்தியேக முக்கியஸ்ர்களுக்கான பகுதி (VIP lounge) ஆகிய வசதியும் இங்கு உள்ளது. ‘நைன்வெல்ஸ் ஐ‘ தொடக்க நிகழ்வை குறித்து கருத்துத் தெரிவித்த Ninewells மருத்துவமனை நிர்வாகம் “ஒருங்கிணைந்த, இலகுவாக அணுகக்கூடிய மற்றும் வசதியான, நோயாளர்களை மையப்படுத்திய அணுகுமுறையின் மூலம் சர்வதேச தரத்திலான கண் பராமரிப்பை வழங்குவதற்கான தமது அர்ப்பணிப்பைப் பிரதிபலிக்கிறது” என்று தெரிவித்துள்ளது.
Ninewells Eye மையத்தின் ஊடாக, நைன்வெல்ஸ் வைத்தியசாலை தமது விசேட சேவைகளை மேலும் பலப்படுத்துவதுடன், இலங்கை முழுவதும் அன்பான மற்றும் உயர்தரமான சுகாதார சேவையை வழங்குவதற்கான அதன் நோக்கத்தை மீண்டும் உறுதிப்படுத்துகிறது.

