Dec 29, 2025 - 02:52 PM -
0
இலங்கையின் கொமர்ஷல் வங்கியானது நிதியமைச்சின் 2024 ஆம் ஆண்டுக்கான இறுதி வரவு செலவுத் திட்ட நிலை அறிக்கைக்கிணங்க, தொடர்ந்து ஐந்தாவது ஆண்டாக சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சியாளர்களுக்கு (SMEs) கடனுதவி வழங்கும் நாட்டின் மிகப்பெரிய கடன் வழங்குநர் எனும் தனது முன்னணி நிலையைத் தக்கவைத்துள்ளது.
இந்த அறிக்கைக்கிணங்க கொமர்ஷல் வங்கியானது, 2024 ஆம் ஆண்டில் ரூ. 330.9 பில்லியன் பெறுமதியான SME கடன்களை வழங்கியுள்ளது. இது அரசாங்க மற்றும் தனியார் துறையினைச் சேர்ந்த 16 வங்கிகள் SMEயினருக்கு வழங்கிய ரூ. 1,090 பில்லியன் கடன்களில் 30.3% ஆகும். இதன் மூலம், கொமர்ஷல் வங்கியானது அருகிலுள்ள போட்டியாளரை விட 91%ற்கு அதிகமான SME கடன் வழங்கலுடன், துறையில் கணிசமாக முன்னிலையில் திகழ்கிறது.
வங்கியின் ஆதரவானது விவசாயம், சேவை, தொழில் மற்றும் பிற துறைகள் என பல்வேறு துறைகளுக்கு விஸ்தரிக்கப்பட்டிருந்தது. இதில், தொழில் துறைக்கு வழங்கப்பட்ட பங்களிப்பு மிகப்பெரியது. 2024 ஆம் ஆண்டில் இலங்கையின் தொழில் நிறுவனங்கள் பெற்ற ரூ. 557.6 பில்லியன் மொத்த கடன்களில், கொமர்ஷல் வங்கியானது 47.8% அதாவது ரூ. 266.8 பில்லியன் கடன்களை இந்தத் துறைக்கு மட்டும் வழங்கியுள்ளது.
இந்த செயல்திறனானனது, வேலைவாய்ப்பு உருவாக்கம், பெறுமதி சேர்த்தல் மற்றும் பொருளாதார நிலைத்தன்மை ஆகியவற்றின் முக்கிய இயக்கியாக விளங்கும் SME துறையை வலுப்படுத்துவதற்கான கொமர்ஷல் வங்கியின் தொடர்ச்சியான மற்றும் மூலோபாயமான ஈடுபாட்டை தெளிவாக வெளிப்படுத்துகிறது.
இந்தத் துறையில் வங்கி தொடர்ந்து முன்னணி வகிப்பது பற்றி கொமர்ஷல் வங்கியின் முகாமைத்துவப்பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான திரு. சனத் மனதுங்க தெரிவிக்கையில், SMEகளுக்கான எமது அர்ப்பணிப்பானது, அவர்களின் வெற்றி மற்றும் நாட்டின் பொருளாதார எதிர்காலத்துடன் பிரிக்க முடியாத வகையில் இணைந்துள்ளது என்ற நம்பிக்கையின் அடிப்படையிலானதாகும். 2024 ஆம் ஆண்டில், வங்கியின் SME - சார்பான முயற்சிகள் 8,700-க்கும் மேற்பட்ட நிறுவனங்களுக்கு நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தி, வேலைவாய்ப்பு உருவாக்கம், சமூக மேம்பாடு மற்றும் பொருளாதார உள்ளடக்கம் ஆகியவற்றை முன்னெடுத்தன. மேலும், புயலின் தாக்கத்தை நாடு எதிர்கொள்ளும் இந்த வேளையில், கொமர்ஷல் வங்கியானது SMEயினருடன் தொடர்ந்து உறுதியாக நின்று, அவர்களின் மீட்பு முயற்சிகளுக்கு ஆதரவு வழங்கி, இலங்கையை மீண்டும் கட்டியெழுப்ப உதவும்.
தொடர்ந்து ஐந்தாவது ஆண்டாகவும் SMEயினருக்கான மிகப்பெரிய கடன் வழங்குநராக நாம் திகழ்ந்து வருகிறோம் என்பதை நிதியமைச்சானது உறுதிப்படுத்தியிருப்பது, நோக்க மையமான எமது அணுகுமுறையின் நேரடி விளைவே ஆகும். நிதி வசதிகளுக்கான அணுகலை மேலும் விரிவுபடுத்தி, SME வளர்ச்சியை வேகப்படுத்தும் தொழில்நுட்பங்களை பயன்படுத்தி, நிறுவனங்கள் சவால்களை எதிர்கொண்டு நிலைத்தன்மையுடன் வளர்வதற்குத் தேவையான வழிகாட்டலும் ஆதரவையும் நாம் தொடர்ந்து வழங்குவோம்.
இலங்கையில் அமெரிக்க டொலர் 1 பில்லியனுக்கும் அதிகமான சந்தை மூலதனத்தைக் கொண்ட முதலாவது வங்கியாகவும் உலகின் தலைசிறந்த 1000 வங்கிகளின் பட்டியலில் முதன் முதலாக உள்ளடக்கப்பட்ட இலங்கையின் வங்கியாகவும் திகழும் கொமர்ஷல் வங்கி, கொழும்பு பங்குச் சந்தையில் (CSE) வங்கித் துறையில் அதிக சந்தை மூலதனத்தைக் கொண்டுள்ளது. மிகப்பெரிய தனியார் துறை கடன் வழங்குநராகவும், SME துறைக்கு மிகப்பெரிய கடன் வழங்குநராகவும், டிஜிட்டல் புத்தாக்கங்களில் முன்னணியும் வகிக்கும் கொமர்ஷல் வங்கியானது, இலங்கையின் முதலாவது 100% கார்பன்-நடுநிலை பேணும் வங்கியுமாகும்.
கொமர்ஷல் வங்கியானது நாடு முழுவதும் தந்திரோபாயரீதியாக அமைக்கப்பட்ட கிளைகள் மற்றும் தானியங்கி இயந்திரங்களின் வலையமைப்பைச் செயற்படுத்திவருகின்றது. மேலும், பங்களாதேஷில் 20 கிளைகள், மாலைதீவில் பெரும்பான்மையான பங்குகளைக் கொண்ட ஒரு முழுமையான Tier I வங்கி, மியான்மாரில் ஒரு நுண்நிதி நிறுவனம் என சர்வதேச ரீதியில் பரந்தளவில் தடம் பதித்த இலங்கையின் வங்கியாகத் தன்னை நிலைநிறுத்தியுள்ளது. துபாய் சர்வதேச நிதியியல் மையத்தில் (DIFC) ஒரு பிரதிநிதி அலுவலகத்தை நிறுவுவதற்கு துபாய் சர்வதேச நிதியியல் சேவைகள் அதிகாரசபையிடமிருந்து அனுமதிபெற்றதுடன் இவ் மைல்கல்லை எட்டிய இலங்கையின் முதல் வங்கியாகத் தன்னைப் பதிவுசெய்துள்ளது.
மேலும்,வங்கியின் முழுமையான உரித்துடைய துணை நிறுவனங்களான CBC Finance Ltd மற்றும் Commercial Insurance Brokers (Pvt) Limited ஆகியவையும் தங்கள் சொந்த கிளை வலையமைப்புகள் மூலம் பல்வேறு நிதிச் சேவைகளை வழங்குகின்றன.

