Dec 29, 2025 - 02:55 PM -
0
SLIM தேசிய விற்பனை விருதுகள் 2025 நிகழ்வில் மிகவும் பாராட்டத்தக்க வகையில் மொத்தமாக 27 விருதுகளை அள்ளிக்குவித்து சாதனையை நிலைநாட்டியுள்ள ஜோன் கீல்ஸ் நுகர்வோர் உணவுகள் துறையானது (John Keells Consumer Foods Sector - JKCF), இலங்கையின் விரைவாக விற்பனையாகும் நுகர்வோர் தயாரிப்புக்கள் துறையில் அசைக்க முடியாத சக்தி என்ற தனது ஸ்தானத்தை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. மிகவும் செயல்திறன் கொண்ட அணிகளைக் கட்டியெழுப்புதல், விற்பனை மகத்துவத்தை வளர்த்தல், மற்றும் தனது பன்முகப்பட்ட வணிகப் பிரிவுகளில் நிலைபேறான வளர்ச்சியை முன்னெடுத்தல் ஆகியவற்றில் இத்துறை காண்பித்து வரும் அர்ப்பணிப்பை இச்சாதனை பிரதிபலிக்கின்றது.
சிலோன் கோல்ட் ஸ்ரோர்ஸ் பிஎல்சி ((Ceylon Cold Stores PLC - CCS), கீல்ஸ் ஃபுட் புரொடக்ட்ஸ் பிஎல்சி (Keells Food Products PLC - KFP), மற்றும் கொழும்பு ஐஸ் கம்பனி (Colombo Ice Company - CICL) ஆகிய புகழ்பூத்த வர்த்தகநாமங்களை உள்ளடக்கியுள்ள JKCF ஆனது, பான வகை, உறைவிக்கப்பட்ட உணவு வகை, மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகள் ஆகியவற்றில் புத்தாக்கம் மற்றும் தலைமைத்துவத்தில் செழுமைமிக்க வரலாற்றைச் சுமக்கும் அங்கீகாரத்தைச் சம்பாதித்துள்ளது. பணியாளர்களில் ஆற்றல்கள் மற்றும் பெறுபேற்றுத்திறன் கலாச்சாரம் ஆகியவற்றில் இது மிக நீண்ட காலமாக கவனம் செலுத்தி வந்துள்ளதுடன், தொழில்துறையில் முன்னிலை வகிக்கும் சாதனைகளுக்கு அவை தொடர்ந்தும் உந்துசக்தியளித்து வருகின்றன. சமீபத்தில் SLIM NSA 2025 நிகழ்வில் அது சம்பாதித்துள்ள அங்கீகாரம், இவ்விருதுகள் நிகழ்வின் வரலாற்றிலேயே தனி நிறுவனமொன்றால் ஒட்டுமொத்தமாக வெல்லப்பட்ட அதிகூடிய எண்ணிக்கை கொண்ட விருதுகளை வென்ற சந்தர்ப்பங்களில் ஒன்றாக மாறியுள்ளது.
CCS பான வகை, CCS உணவுகள், கீல்ஸ் ஃபுட் புரொடக்ட்ஸ், ஏற்றுமதிச் செயல்பாடுகள், மற்றும் ஒட்டுமொத்த தொழில்துறை பிரிவுகள் மத்தியில் இவ்விருதுகள் ஈட்டப்பட்டுள்ளதுடன், மொத்தமாக 7 தங்கம், 8 வெள்ளி, 8 வெண்கலம், மற்றும் 4 சிறப்புத் தகுதி விருதுகளை JKCF அள்ளிக்குவித்துள்ளது. முன்கள பிரதிநிதிகள் முதல் பிராந்திய முகாமையாளர்கள் வரை ஒவ்வொரு மட்டத்திலும் விற்பனை தொழில் சார்ந்தவர்களின் மிகச் சிறந்த பங்களிப்புக்களைப் போற்றிக் கௌரவிக்கும் வகையில் இடம்பெற்று வரும் இந்நிகழ்வு, திட்டமிட்டப்பட்டு வடிவமைக்கப்பட்ட திறன் மேம்பாட்டு முயற்சிகள் மற்றும் முற்போக்கான தலைமைத்துவ நிகழ்ச்சித்திடட்டங்கள் ஆகியவற்றினூடாக, வர்த்தக திறமையாளர்களை வளர்ப்பதில் இத்துறையின் அர்ப்பணிப்பை அடிக்கோடிட்டுக் காட்டுகின்றது.
ஜோன் கீல்ஸ் நுகர்வோர் உணவுகள் துறையின் தலைவர் தமிந்த கம்லத் அவர்கள் இச்சாதனை குறித்து கருத்து தெரிவிக்கையில்: “அனைத்து வணிக மட்டங்களிலும் எமது வர்த்தக அணிகளின் பேரார்வம், ஒழுக்கம், மற்றும் நெகிழ்திறன் ஆகியவற்றுக்கு சான்றாக SLIM தேசிய விற்பனை விருதுகள் நிகழ்வில் நாம் நிலைநாட்டியுள்ள சாதனை அமையப்பெற்றுள்ளது. அவர்களுடைய அர்ப்பணிப்பானது இலங்கையின் விரைவாக விற்பனையாகும் நுகர்வோர் தயாரிப்புக்கள் துறையில் பெறுபேற்றுத்திறன் மகத்துவத்தை மென்மேலும் சிறப்பித்து வருகின்றது. இவ்வெற்றிக்குப் பங்களித்துள்ள அனைவர் குறித்தும் நாம் மிகவும் பெருமை கொள்வதுடன், திறன் மேம்பாடு மற்றும் தலைமைத்துவ வளர்ச்சி ஆகியவற்றின் தொடர்ந்தும் முதலீடு செய்வதனூடாக, எமது திறமைசாலிகள் வரிசையை வலுப்படுத்துவதில் நாம் ஆழமான அர்ப்பணிப்புடன் உள்ளோம்.”
தனது வர்த்தக உத்தியை தொடர்ந்தும் JKCF விரைவுபடுத்தி வருகின்ற நிலையில், அதிநவீன பயிற்சிகள், மேம்பட்ட தலைமைத்துவ வளர்ச்சிப் பாதைகள், மற்றும் தொழிற்துறையில் முன்னிலை வகிக்கும் வகையில் முடிவு நுகர்வோரை எட்டும் சந்தைப்படுத்தல் நடைமுறைகள் ஆகியவற்றுடன் தனது விற்பனை ஆளணிக்கு வலுவூட்டுவதில் இந்த நிறுவனம் தொடர்ந்தும் கவனம் செலுத்தும். SLIM NSA 2025 நிகழ்வில் சம்பாதித்துள்ள அங்கீகாரம், இத்துறையின் சாதனைகளைக் கொண்டாடுவது மாத்திரமன்றி, நாட்டின் விரைவாக விற்பனையாகும் நுகர்வோர் உணவுகள் துறையில் விற்பனை மகத்துவத்திற்கான தர ஒப்பீட்டு நியமம் என்ற தனது வகிபாகத்தையும் அது மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.

