Dec 29, 2025 - 03:42 PM -
0
நாட்டை கட்டியெழுப்பும் செயல் திட்டத்தில் தேசிய மக்கள் சக்தியின் அபிவிருத்தி பணிகள் மலையக பகுதியில் ஆரம்பிக்கப்பட்டு வருகின்றன. இதற்கமைய கொட்டகலை பிரதேச சபைக்குட்பட்ட ஆகில் தோட்டத்தில் கொலனிக்கு செல்லும் பிரதான வீதியை இணைக்கும் கொலனி வீதி கொட்டகலை பிரதேச சபையின் உப தலைவி யாகுலமேரி தலைமையில் இன்று (29) திகதி அடிக்கல் நாட்டி ஆரம்பித்து வைக்கப்பட்டன.
குறித்த வீதியினை பயன்படுத்தும் 120 குடும்பங்களுக்கும் மேற்பட்ட 500 பேர் வரை இந்த வீதி பயன்படுத்தி வந்தனர் கடந்த காலங்களில் இவ்வீதி குன்றும் குழியுமாக மிகவும் மோசமான நிலையில் காணப்பட்டதனால். மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வந்தனர் வீதி சீரின்மையால் முச்சக்கரவண்டி சாரதிகள் அதிக பணம் அறவிடுவதாகவும் அவசரத்திற்கு ஒரு நோயாளியை கூடி கொண்டு முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.
இதனை சீர் செய்து தருமாறு கொட்டகலை பிரதேச சபை தலைவி உட்பட உறுப்பினர்களுக்கு முன்வைத்த கோரிக்கைக்கு அமைய இந்த வீதி சுமார் பத்து லட்சம் ரூபா செலவில் கொங்கிறீட் இட்டு புனரமைக்கப்படவுள்ளது.
குறித்த வீதியின் அபிவிருத்தி பணிகள் இன்று ஆரம்பிக்கப்பட்டு எதிர்வரும் 31 ஆம் திகதி முன் நிறைவு செய்யப்படவுள்ளதாக இதனை ஏற்பாடு செய்தவர்கள் தெரிவித்தனர்.
இங்கு உரையாற்றிய கொட்டகலை பிரதேச சபையின் உபதலைவி மற்றும் உறுப்பினர்கள் தேசிய மக்கள் சக்தியினூமாக அபிவிருத்தி பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் அது பிரஜா சக்தி செய்திட்டத்தின் கீழ் பல வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் அதனை ஜனவாரி முதல் பல வேலைதிட்டங்கள் ஊடாக அபிவிருத்தி பணிகள் முன்னெடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
இது குறித்து உறுப்பினர் கருத்து தெரிவிக்கையில் ஜனாதிபதியின் வேலை திட்டங்கள் தொடர்பாக தற்போது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளதாகவும் ஜனாதிபதி மீது புதிய நம்பிக்கை கடந்த காலங்களை விட பிறந்துள்ளதாகவும் இதனால் எதிர்க்காலத்தில் மிகவும் ஒற்றுமையுடன் செயப்படுவதற்குரிய வாய்ப்பு கிட்டுவதாகவும் அதனால் எதிர்காலத்தில் மக்கள் அமைதியாகவும் சமாதானமாகவுமத் வாழ்வதற்கான சுழல் காணப்படுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.
இந்நிகழ்வுக்கு கொட்டகலை பிரதேச சபையின் உப தலைவி யாகுல மேரி உட்பட பிரதேச சபை உறுப்பினர்கள் பொதுக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
--

