Dec 30, 2025 - 10:22 AM -
0
இரண்டு நாட்களுக்கு முன்பு யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு பகுதியில் வசிக்கும் இளைஞர் கடலில் காணாமல் போன நிலையில் அவரது சடலம் இன்று (30) கரையொதுங்கியுள்ளது.
நண்பர்களுடன் தாளையடி கடற்கரைக்கு நீராடச் சென்ற வேளை கடலோடு இழுத்துச் செல்லப்பட்டு காணாமல் போயிருந்தார்.
இவரை தேடும் பணி இரண்டு நாட்களாக முன்னெடுக்கப்பட்டுவந்த நிலையில் குறித்த இளைஞனின் சடலம் அதே பகுதியில் இன்று கரையொதுங்கியுள்ளது
சடலமாக மீட்கப்பட்ட இளைஞன் உடுத்துறை பாரதி விளையாட்டுக் கழகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் 27 வயதுடைய உதைபந்தாட்ட வீரர் ஆவார்.
சடலத்தை மருதங்கேணி பொலிஸார் பார்வையிட்டதுடன் மேலதிக நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.
--

