வணிகம்
தென்கிழக்கு ஆசியாவுக்கான 600,000 யூரோ பிராந்திய நிவாரணத்தின் ஒரு பகுதியாக, வெள்ளப்பெருக்கைத் தொடர்ந்து இலங்கை மீண்டெழுவதற்கு 200,000 யூரோ தொகையை அலியான்ஸ் பங்களித்துள்ளது

Dec 30, 2025 - 01:32 PM -

0

தென்கிழக்கு ஆசியாவுக்கான 600,000 யூரோ பிராந்திய நிவாரணத்தின் ஒரு பகுதியாக, வெள்ளப்பெருக்கைத் தொடர்ந்து இலங்கை மீண்டெழுவதற்கு 200,000 யூரோ தொகையை அலியான்ஸ் பங்களித்துள்ளது

இலங்கையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற அனர்த்த நிவாரண முயற்சிகளுக்கு உதவுவதற்காக 200,000 யூரோ தொகையை நன்கொடையாக வழங்குவதை ஜேர்மனியின் மியூனிக் மாநகரத்தைத் தலைமையகமாகக் கொண்ட Allianz SE அறிவித்துள்ளது. தாய்லாந்து மற்றும் இந்தோனேசியா ஆகிய நாடுகளுக்கும் தனது உதவியை Allianz SE வழங்கியுள்ளதுடன், தென்கிழக்காசியாவின் மத்தியில் அனர்த்த நிவாரணமாக மேலும் 400,000 யூரோ தொகையை பங்களித்துள்ளது. 

பருவகால கனமழை காரணமாக தென்கிழக்காசிய நாடுகள் மத்தியில் பாரிய வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவுகள் ஏற்பட்டுள்ளதுடன், ஒரு வார காலமாக நீடித்த பேரழிவு காரணமாக 1,100 க்கும் மேற்பட்ட மக்கள் உயிரைப் பலிகொடுத்துள்ளதுடன், சிக்கலான மீட்பு நடவடிக்கைகள் மத்தியில் பல நூற்றுக்கணக்கான மக்கள் இன்னமும் காணாமல் போயுள்ளனர். இந்த மூன்று நாடுகளிலும் தனது நிறுவனங்களுடன் ஆழமாக வேரூன்றியுள்ள அலியான்ஸ், ஆசியாவின் மத்தியில் பல மில்லியன் கணக்கான வாடிக்கையாளர்களுக்கு சேவைகளை வழங்கி வருகின்றது. பாதிக்கப்பட்டுள்ள மக்கள் மற்றும் சமூகங்களுக்கு ஆதரவளிப்பதன் மூலமாக, தன்னுடன் தொடர்புபட்ட அனைத்து தரப்பினருக்கும், உதவிகள் தேவைப்படுகின்ற தருணங்களில் ஆதரவை நீட்டித்து, எதிர்காலத்தைக் காக்கும் தனது வாக்குறுதியை அலியான்ஸ் நிறைவேற்றி வருகின்றது. 

மிகவும் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடி உதவிகளை வழங்குவதற்காக இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தினூடாக 100,000 யூரோ தொகையை Allianz SE ஒதுக்கும். சமூகங்கள் தம்மை மீளக்கட்டியெழுப்ப உதவி, எதிர்காலத்தில் இத்தகைய நிகழ்வுகளின் போது தம்மைக் காத்துக்கொள்வதற்கு தயாராக உள்ளமையை வலுப்படுத்தி, அனர்த்த தடுப்பு மற்றும் காலநிலை நெகிழ்திறன் ஆகியவற்றில் கவனம் செலுத்தியவாறு, அலியான்ஸ் இன்சூரன்ஸ் லங்கா லிமிட்டெட் மற்றும் தெரிவு செய்யப்பட்ட உள்ளூர் கூட்டாளர்களின் ஒத்துழைப்புடன் அனர்த்தத்திற்கு பின்னரான உதவி நடவடிக்கைகளுக்காக மேலும் 100,000 யூரோ தொகையை அது வழங்கவுள்ளது. 

ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் கூட்டிணைப்புக்கள் மற்றும் கையப்படுத்தல்கள், பணியாளர்கள் மற்றும் கலாச்சாரங்களுக்குப் பொறுப்பு வகிக்கும், Allianz SE பணிப்பாளர் சபை அங்கத்தவர் ரெனேட் வாக்னர் அவர்கள் இது குறித்து கருத்து தெரிவிக்கையில்: 

“தென்கிழக்காசியாவில் பாரிய வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவுகளால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் மற்றும் சமூகங்களுக்கு உறுதுணையாக எப்போதும் அலியான்ஸ் செயற்படும். உடனடி நிவாரணம் மற்றும் நீண்டகால நெகிழ்திறன் ஆதரவை வழங்குவதனூடாக, குடும்பங்கள் அவற்றிலிருந்து மீள்வதற்கு உதவி, உள்ளூர் சமூகங்களுக்கு வலுவூட்டி, காலநிலையுடன் தொடர்புபட்ட எதிர்கால நிகழ்வுகளின் போது அதற்கு முகங்கொடுப்பதற்கு தம்மை சிறப்பாக தயார்படுத்திக் கொண்டவர்களாக மாற்றிக்கொள்ள உதவுவதே நமது நோக்கம்.” 

அலியான்ஸ் ஆசிய பசுபிக் பிராந்தியத்திற்கான பிரதம நிறைவேற்று அதிகாரி அனுஷா தவராஜா அவர்கள் கருத்து தெரிவிக்கையில்: 

“இந்தோனேசியா, தாய்லாந்து மற்றும் இலங்கை ஆகிய நாடுகளில் ஏராளமான குடும்பங்களும், சமூகங்களும் கணிசமான இழப்பிற்கும், சீர்குலைவுகளுக்கும் முகங்கொடுத்துள்ளன. இத்தகைய தருணங்களின் போது அலியான்ஸ் அவர்களுக்கு உறுதுணையாக நிற்கின்றது. எமது பணியாளர்கள், நாம் சேவைகளை வழங்கும் எமது வாடிக்கையாளர்கள் மற்றும் சமூகங்களின் ஆகியவற்றின் தாயகமாக ஆசிய பசுபிக் காணப்படுவதுடன், இப்பிராந்தியத்தின் மீது நாம் ஆழ்ந்த அக்கறை கொண்டுள்ளோம். மிகவும் தேவைப்படுகின்ற உதவிகளை நிவாரணமாக வழங்குவதே எமது உடனடி நோக்கமாக உள்ள அதேசமயம், பாதிக்கப்பட்டவர்கள் நம்பிக்கையுடன் தலைதூக்கும் நெகிழ்திறனை வலுப்படுத்தி, சமூகங்கள் தம்மைக் கட்டியெழுப்புவதற்கு ஆதரவளித்து வருகின்றோம்.” 

ஆசியா மற்றும் அங்குள்ள மக்கள் மீது அலியான்ஸ் முழுமையான அக்கறை கொண்டுள்ளது. அலியான்ஸ் குழுமத்தைப் பொறுத்தவரையில் மூலோபாய வளர்ச்சிக்கான பிராந்தியமாக இது காணப்படுவதுடன், தென்கிழக்காசியா எங்கிலும் அது ஏற்கனவே வலுவான சந்தை ஸ்தானங்களை நிலைநாட்டியுள்ளது. இந்தோனேசியா, தாய்லாந்து மற்றும் இலங்கை ஆகியவற்றுக்கு அப்பால், சீனா, இந்தியா, மலேசியா, மற்றும் சிங்கப்பூர் உள்ளிட்ட மற்றும் பல நாடுகளில் பல்வேறுபட்ட வியாபாரப் பிரிவுகளையும் அலியான்ஸ் கொண்டுள்ளது. 

அலியான்ஸ் இன்சூரன்ஸ் லங்கா லிமிட்டெட் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியும், இலங்கைக்கான முகாமையாளருமான பிரஷாந்த் குறோவர் அவர்கள் கருத்து வெளியிடுகையில்: “சமீபத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு இலங்கை எங்கிலும் சமூகங்கள் மத்தியில் பேரனர்த்தத்தை ஏற்படுத்தியுள்ளதுடன், மீளக் கட்டியெழுப்புதல் மற்றும் நெகிழ்திறன் ஆகியவற்றுக்கான அவசர தேவையையும் அடிக்கோடிட்டுக் காட்டியுள்ளது. இக்காலகட்டங்களில் சமுதாயங்கள் வெகுவிரைவாக இதிலிருந்து மீண்டு, எதிர்காலத்திற்காக வாழ்வுகளையும், வாழ்வாதாரங்களையும் பாதுகாத்துக் கொள்ள இடமளிப்பதற்கே அலியான்ஸ் லங்கா முன்னுரிமையளித்துள்ளது. அலியான்ஸ் குழுமத்தின் ஆதரவுடனான நிவாரண நடவடிக்கைகள் மூலமாக, சமூகங்கள் ஸ்திரத்தன்மையை மீளப்பெற்று, நீண்ட காலத்திற்கான வலுவைக் கட்டியெழுப்ப நாம் உதவுகின்றோம்.” 

அவசரகால பதில் நடவடிக்கையிலிருந்து மீளக் கட்டியெழுப்பும் கட்டத்தை நோக்கிய இலங்கை நகரும் இவ்வேளையில், எதிர்காலத்திற்கான வலுவாக மீளக் கட்டியெழுப்பப்பட்ட மற்றும் சிறப்பாக தயார்படுத்தப்பட்ட சமூகங்களாக மாறுவதற்கு உதவுவதில் பரந்த அர்ப்பணிப்பை அலியான்ஸின் ஆதரவு பிரதிபலிக்கின்றது. உடனடி மனிதாபிமான உதவிகள் மற்றும் நெகிழ்திறனைக் கட்டியெழுப்புதல், அனர்த்த இடரைக் குறைத்தல் மற்றும் காலநிலை தகவமைப்பு சார்ந்த நீண்ட கால முயற்சிகள் ஆகியவற்றை இணைப்பதனூடாக தீவிர காலநிலை சம்பவங்களின் போது ஏற்படுகின்ற சவால்களின் பரிணமிப்பிற்கு தீர்வு காண்பதில் அலியான்ஸ் தொடர்ந்தும் முக்கிய பங்காற்றி வருகின்றது. இழந்தவற்றை மீளப்பெறுவதற்கு அப்பால், எதிர்கால அதிர்ச்சிகளை சிறப்பாக எதிர்கொள்வதற்கு சமூகங்களை வலுப்படுத்தி, நிலைபேறான வழியில் மீளக் கட்டியெழுப்பும் ஒரு அணுகுமுறையை இது பின்பற்றுகின்றது. 

அலியான்ஸ் லங்கா தொடர்பான விபரங்கள் 

ஜேர்மனியின் மியூனிக் மாநகரத்தில் தலைமை அலுவலகத்தைக் கொண்ட, காப்புறுதி மற்றும் சொத்து முகாமைத்துவ வணிகங்களில் உலகளாவில் முன்னிலை வகித்து வருகின்ற Allianz SE ன் முழுமையான உரிமையாண்மையின் கீழான துணை நிறுவனங்களில் ஒன்றாக அலியான்ஸ் இன்சூரன்ஸ் லங்கா லிமிட்டெட் இயங்கி வருகின்றது. Interbrand மற்றும் Brand Finance ஆகியவற்றிடமிருந்து “World’s No.1 Insurance Brand” என்ற அங்கீகாரம் அலியான்ஸ் நிறுவனத்திற்கு கிடைத்துள்ளது. 

அலியான்ஸ் தொடர்பான விபரங்கள் 

கிட்டத்தட்ட 70 நாடுகளில் தனியார் மற்றும் நிறுவன வாடிக்கையாளர்களுக்கு சேவையாளர்களை வழங்கி, உலகின் முன்னணி காப்புறுதி மற்றும் சொத்து முகாமைத்துவ நிறுவனங்களில் ஒன்றாக அலியான்ஸ் குழுமம் திகழ்ந்து வருகின்றது. சொத்து, ஆயுள் மற்றும் மருத்துவ காப்புறுதி, உதவிச் சேவைகள், கடன் காப்புறுதி மற்றும் சர்வதேச வர்த்தகக் காப்புறுதி என பரந்த வகைப்பட்ட தனிநபர் மற்றும் நிறுவன காப்புறுதி சேவைகள் மூலமாக அலியான்ஸ் வாடிக்கையாளர்கள் பயன்பெற்று வருகின்றனர். தனது காப்புறுதி வாடிக்கையாளர்களின் சார்பில் 761 பில்லியன் யூரோ* வரையான தொகையை நிர்வகித்து, உலகின் மிகப் பெரிய முதலீட்டாளர்களில் ஒன்றாக அலியான்ஸ் காணப்படுகின்றது. மேலும், எமது சொத்து முகாமைத்துவ நிறுவனங்களான PIMCO மற்றும் Allianz Global Investors ஆகியன 1.9 ட்ரில்லியன் யூரோ* வரையான தொகை கொண்ட மூன்றாம் தரப்பு சொத்துக்களை நிர்வகித்து வருகின்றன. எமது வியாபார நடைமுறைகள் மற்றும் முதலீட்டு தீர்மானங்களில் சுற்றுச்சூழல் மற்றும் சமூக அடிப்படைகளை முறையாக ஒருங்கிணைப்பதன் பலனாக, Dow Jones Sustainability Index சுட்டெண் பிரகாரம் காப்புறுதித் துறையில் முன்னிலை வகிக்கும் நிறுவனங்கள் மத்தியில் நாமும் இடம்பெற்றுள்ளோம். 2024 ம் ஆண்டில், 156,000 க்கும் மேற்பட்ட ஊழியர்களுடன், குழுமத்தால் 179.8 பில்லியன் யூரோ மொத்த வணிகம் ஈட்டப்பட்டுள்ளதுடன், 16.0 பில்லியன் யூரோ செயல்பாடுகள் மூலமான வருமானமும் ஈட்டப்பட்டுள்ளது.

Comments
0

MOST READ
01
02
03
04
05