Dec 30, 2025 - 04:39 PM -
0
புதிய அரசாங்கம் பல்கலைக்கழகத்தின் சட்டங்களை மாற்ற முயர்ச்சிப்பதைக் கண்டித்து பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தினர் இன்று (30) பணிப்பகிஷ்கரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இன்று ஒருநாள் மாத்திரம் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டுவரும் போராட்டம் தொடர்பாக இன்று யாழ்ப்பாண பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் தலைவர் பேராசிரியர் இ.சஸ்வேஸ்வரன் ஊடக சந்திப்பினை மேற்கொண்டார்.
குறிப்பாக பல்கலைக்கழக பீடாதிபதியைத் தெரிவு செய்வதற்கான 1978 ஆண்டு 16 இலக்க சட்டத்தினை திருத்தாது புதிய சட்டத்தினை பாராளுமன்றில் சமர்ப்பிக்க முன்வைத்துள்ளது. என குற்றம் சாட்டினார்.
மேலும் கல்வி அமைச்சு 49, 51 சரத்துக்களை மாத்திரம் திருத்துவதாக குறிப்பிட்ட பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தினர், இதனால் பல்கலைக்கழக நடைமுறைகளில் தேவையற்ற மாற்றமும் பீடாதிபதிகளின் தெரிவில் முறைகேடு ஏற்படுவதாகவும் சுட்டிக்காட்டினர்.
--

