Dec 30, 2025 - 04:46 PM -
0
யாழ்ப்பாணத்தை சேர்ந்த மாணவி ஒருவர் தான் சிறுக சிறுக சேகரித்த உண்டியல் பணத்தை 'டித்வா' புயலால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு கற்றல் கையேட்டினை தயாரிப்பதற்காக வழங்கிய நெகிழ்வான சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
சம்பவம் இது குறித்து மேலும் தெரியவருகையில்,
'டித்வா' புயலால் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு மற்றும் மலையகத்தை சேர்ந்த மாணவர்களுக்கு கற்றல் கையேடுகளை தயாரிப்பதற்கான நிதி சேகரிப்பில் வெண்கரம் அமைப்பின் தன்னார்வலர்கள் ஈடுபட்டு வந்தனர்.
அந்தவகையில் சுழிபுரம் விக்டோரியா கல்லூரியில் தரம் 07 இல் கல்வி பயிலும் மாணவியான பு.சர்ஜனா என்ற சிறுமி, தனது அன்றாட செலவுகளை தியாகம் செய்து, சிறுக சிறுக சேகரித்த உண்டியல் பணத்தினை கற்றல் கையேடுகளை தயாரிப்பதற்கு வழங்கியுள்ளார்.
இந்நிலையில் நேற்று (29) வெண்கரம் அமைப்பினர் குறித்த மாணவியின் சமூக நலனை பாராட்டி, அவரை கௌரவித்தமை குறிப்பிடத்தக்கது.
--

