Dec 30, 2025 - 05:09 PM -
0
இலங்கைப் பணியாளர்களை இஸ்ரேல் நாட்டில் தற்காலிகப் பணிகளில் ஈடுபடுத்துவது தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையில் உடன்படிக்கையொன்றில் கையெழுத்திடுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
அதற்கமைய, வீட்டுப் பராமரிப்பு, விவசாயம் மற்றும் நிர்மாணத் துறைகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பணிகளுக்காக ஆட்களை இணைத்துக்கொள்வது தொடர்பான நடைமுறைப்படுத்தல் திட்டங்கள் ஏற்கனவே அவ்வப்போது கையெழுத்திடப்பட்டிருந்தன.
தற்போது அந்த உடன்படிக்கைகளின் கீழ், இஸ்ரேலின் வர்த்தகம் மற்றும் சேவைத் துறைகளிலும் இலங்கைப் பணியாளர்களைப் பணியமர்த்துவதற்கு இஸ்ரேல் உத்தியோகபூர்வமாக விருப்பம் தெரிவித்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கமைய, குறித்த துறைகளில் இலங்கைப் பணியாளர்களை வேலைக்கு அமர்த்துவதற்கு ஏதுவாக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளுக்கு அமைச்சரவை தனது இணக்கப்பாட்டைத் தெரிவித்துள்ளது.

