Dec 30, 2025 - 05:34 PM -
0
இலங்கைக்கு ஒரு மில்லியன் யுவான் நிவாரண உதவியை வழங்குவதற்கு சீன கம்யூனிஸ்ட் கட்சி தீர்மானித்துள்ளது.
இலங்கையிலுள்ள சீனத் தூதரகம் இன்று (30) இதனை அறிவித்துள்ளது.
இந்த நிவாரண உதவியானது சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழுவின் சர்வதேச திணைக்களத்தினால் வழங்கப்படவுள்ளது.
இந்தத் தீர்மானம் தொடர்பாக X கணக்கில் பதிவொன்றை இட்டுள்ள சீனத் தூதரகம், இலங்கை மக்கள் மீது சீன கம்யூனிஸ்ட் கட்சி கொண்டுள்ள "அன்பு மற்றும் அக்கறையை" இது வெளிப்படுத்துவதாகக் குறிப்பிட்டுள்ளது.

