சினிமா
வசூல் வேட்டையில் 'துரந்தர்'!

Dec 30, 2025 - 06:14 PM -

0

வசூல் வேட்டையில் 'துரந்தர்'!

பாலிவுட் இயக்குநர் ஆதித்யா தார் இயக்கத்தில், ரன்வீர் சிங் நடிப்பில் கடந்த 5 ஆம் திகதி வெளியான படம் 'துரந்தர்'. இப்படத்தில் மாதவன், அக்ஷய் கன்னா, அர்ஜுன் ராம்பால், சஞ்சய் தத், சாரா அர்ஜுன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மக்கள் மத்தியில் இப்படத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது. 

பாகிஸ்தானில் 'ஆபரேஷன் லியாரி' மற்றும் இந்திய உளவுத்துறை நிறுவனமான 'ரா' மேற்கொண்ட ரகசியப் பணிகளை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட இப்படம், 6 நாடுகளில் தடை செய்யப்பட்டாலும், வசூலில் சாதனை படைத்து வருகிறது. 

இந்நிலையில், படம் வெளியாகி 24 நாளான நிலையில், 'துரந்தர்' திரைப்படம் உலகளவில் 1100.23 கோடி ரூபா வசூலை குவித்துள்ளதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது. அதன்படி இந்தியாவில் 862.23 கோடியும், உலகளவிய ரீதியில் 238 கோடியும் குறிவித்துள்ளது. இதன்மூலம் 2025 ஆம் ஆண்டு அதிக வசூல் செய்த படம் என்ற சாதனையைப் படைத்துள்ளது.

Comments
0

MOST READ
01
02
03
04
05