Dec 31, 2025 - 11:31 AM -
0
டக்ளஸ் தேவானந்தா கைது செய்யப்பட்டதை நாங்கள் வழி கொழுத்தி கொண்டாடுகின்றோம். அன்று பிள்ளையான் கைது செய்யப்பட்டார். நாங்கள் கழித்து கொண்டாடுகின்றோம். இதன் மூலமாக அரசாங்கம் ஒரு செய்தியை தெளிவாக சொல்கின்றது. நாங்கள் வட கிழக்கிலே வந்து எந்த அரசியல் தலைவரை கைது செய்தாலும் அந்த மக்கள் தங்களை ஆதரிக்கின்றார்கள் என தமிழ் தேசிய கட்சியின் தேசிய அமைப்பாளரும், யாழ். மாநகர சபை உறுப்பினருமான சுவீகரன் நிஸாந்தன் தெரிவித்தார்.
யாழில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
குற்றம் செய்திருந்தால் அந்த குற்றத்துக்கான கைதை நீங்கள் செய்யுங்கள். அந்த கைதுகள் நீதியான முறையில் நடைபெற வேண்டும். அந்த கைதிகள் சட்டத்தின் படி நடவடிக்கைகளை குற்றவியல் சட்டங்களுக்கூடாக நீதிமன்றங்கள் ஊடாக நடைமுறைப்படுத்த வேண்டும். அதில் எந்த விதமான மாற்றுக்கருத்தும் இல்லை.
ஆனால் எம்மவர்கள் வந்து கைதினை ஒரு மகிழ்ச்சிகரமாக கொண்டாடுகின்ற நிலையை நாங்கள் உருவாக்கக் கூடாது.
ஏனென்றால், எங்களுடைய வரலாறுகளை, பிறப்பிலேயே வரலாறுகளை தெரிந்தவர்கள் இந்த அரசியல் கட்சித் தலைவர்கள்.
இவ்வாறான வரலாறுகளை தெரிந்த அரசியல் தலைவர்களை கைது செய்து அடைத்து விட்டு, சில கோமாளி அரசியல்வாதிகளை இன்று புகுத்துகின்றார்கள்.
அவ்வாறு ஒரு வரலாறு தெரிந்த அரசியல்வாதிகளை கைது செய்து உள்ளே அடைத்துவிட்டு கோமாளிகளை புகுத்துவதன் நோக்கம் இந்த உலக அரங்கில் இருந்து தமிழ்த் தேசிய அரசியலை வந்து ஒரு நீக்கும் செயற்பாடாக நாங்கள் பார்க்க வேண்டியிருக்கின்றது.
--

