செய்திகள்
வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவு: புஹாரி கட்சியிலிருந்து இடைநிறுத்தம்

Dec 31, 2025 - 04:34 PM -

0

வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவு: புஹாரி கட்சியிலிருந்து இடைநிறுத்தம்

கொழும்பு மாநகர சபை உறுப்பினர் சோஹாரா புஹாரியின் கட்சி உறுப்புரிமையை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடைநிறுத்துவதற்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நடவடிக்கை எடுத்துள்ளது. 

அவர் கொழும்பு மாநகர சபையின் வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்தமையே இதற்கான காரணமாகும். 

வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக வாக்களிக்குமாறு கட்சித் தலைவர் ரவூப் ஹக்கீம் தனது கட்சி உறுப்பினர்களுக்கு தனிப்பட்ட ரீதியில் பணிப்புரை விடுத்திருந்த போதிலும், புஹாரி கொழும்பு மாநகர சபை வரவு செலவுத் திட்ட யோசனைக்கு ஆதரவாக வாக்களித்துள்ளதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நிசாம் காரியப்பர் வெளியிட்டுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

முஸ்லிம் காங்கிரஸ் அவரது இந்த நடத்தையை "கட்சி ஒழுக்கத்தை கடுமையாக மீறும் செயல்" எனக் குறிப்பிட்டுள்ளது. 

எவ்வாறாயினும், இது தொடர்பில் காரணங்களை விளக்கி ஒரு வாரத்திற்குள் சத்தியக்கடதாசி ஒன்றை சமர்ப்பிக்குமாறு அந்தக் கடிதத்தின் மூலம் புஹாரிக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. 

அதற்கு இணங்கத் தவறினால் முன்னறிவிப்பின்றி மேலதிக ஒழுக்காற்று நடவடிக்கைகளை எடுக்க நேரிடும் எனவும் முஸ்லிம் காங்கிரஸ் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Comments
0

MOST READ
01
02
03
04
05