வணிகம்
TRI - ZEN செயற்திட்டத்தின் நிலையான வாடகைப் போக்கு மற்றும் உயர் பலாபலன் – John Keells Properties

Dec 31, 2025 - 04:34 PM -

0

TRI - ZEN செயற்திட்டத்தின் நிலையான வாடகைப் போக்கு மற்றும் உயர் பலாபலன் – John Keells Properties

கொழும்பு 02 இல் அமைந்துள்ள John Keells Properties நிறுவனத்தின் முதன்மையான குடியிருப்பு செயற்திட்டமான TRI-ZEN, அதன் மத்திய அமைவிடம், நவீன வாழ்க்கைமுறை வசதிகள் மற்றும் ஒருங்கிணைந்த ஸ்மார்ட் குடியிருப்பு சூழல் ஆகியவற்றின் காரணமாக, தொடர்ச்சியான நிலையான வாடகை வருமானத்தை அளித்து வருவதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. 

பிரபல ஹோட்டல்கள், சூப்பர் மார்க்கெட்டுகள், உணவகங்கள், A-தர அலுவலக மையங்கள் மற்றும் பொதுப் போக்குவரத்து வசதிகளுக்கான எளிய அணுகல் ஆகியவற்றின் காரணமாக, நகரின் மையத்தில் வசதியான மற்றும் எதிர்காலத்திற்கு ஏற்ற வாழ்க்கைமுறையை நாடும் உள்ளூர் குடியிருப்பாளர்கள் மற்றும் இலங்கையில் வசிக்கும் வெளிநாட்டவர்கள் மத்தியில் TRI-ZEN குறிப்பிடத்தக்க வரவேற்பைப் பெற்றுள்ளது. 

இந்த அதிகரித்த கேள்வியை பிரதிபலிக்கும் வகையில், அனைத்து வகை அடுக்குமனைகளுக்கான வாடகை மதிப்புகளும் கணிசமாக உயர்ந்துள்ளன. தற்போதைய நிலவரப்படி, ஒரு படுக்கையறை கொண்ட அடுக்குமனைக்கான மாதாந்த வாடகை 1,000 அமெரிக்க டொலருக்கு மேல், இரண்டு படுக்கையறை கொண்ட அடுக்குமனைக்கு சுமார் 1,250 அமெரிக்க டொலர், மூன்று படுக்கையறை கொண்ட அடுக்குமனைக்கு சுமார் 1,400 அமெரிக்க டொலர் என்ற அளவில் காணப்படுகிறது. 

தற்போதைய சந்தை மதிப்பின் அடிப்படையில், இவ்வாடகைத் தொகைகள் வருடாந்தம் 5.5% முதல் 6% வரை வாடகை வருமானத்தை வழங்குவதாகவும், இதன் மூலம் கொழும்பில் குடியிருப்பு முதலீடுகளில் உயர்ந்த பலாபலன் தரும் செயற்திட்டங்களுள் TRI-ZEN முன்னணியில் இடம்பெறுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தற்போது குறைந்த எண்ணிக்கையிலான அடுக்குமனைகளே விற்பனைக்கு உள்ள நிலையில், வீடு வாங்க விரும்புவோர் மற்றும் முதலீட்டாளர்கள் மத்தியில் இந்த செயற்திட்டத்தின் மீதான ஆர்வம் தொடர்ந்து அதிகரித்து வருவதாக John Keells Properties தெரிவித்துள்ளது. 

இதுகுறித்து கருத்து தெரிவித்த John Keells Properties நிறுவனத்தின் விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் துறை தலைமை அதிகாரி நதீம் ஷம்ஸ் அவர்கள், 

“TRI-ZEN இல் காணப்படும் நிலையான வாடகை வருமானம், அதன் மத்திய அமைவிடம் மற்றும் அது வழங்கும் வாழ்க்கைமுறை வசதிகளின் தெளிவான பிரதிபலிப்பாகும். இன்றைய நகர வாழ்வில் முக்கியமாகக் கருதப்படும் சௌகரியம், இணைப்பு மற்றும் நவீன வசதிகள் ஆகியவை அனைத்தையும் TRI-ZEN ஒருங்கிணைந்த வகையில் வழங்குகிறது. குறைந்த எண்ணிக்கையிலான அடுக்குமனைகளே தற்போது உள்ள நிலையில், கொழும்பின் மையத்தில் குடியிருப்பு ஒன்றை கொள்வனவு செய்ய விரும்புவோருக்கு இது ஒரு முக்கிய வாய்ப்பாகும்” என்றார். 

TRI-ZEN இல் சினிமா ஹால், பல உடற்பயிற்சிக்கூடங்கள், இரண்டு நீச்சல் தடாகங்கள், நடைப்பயிற்சிப் பாதை, நிகழ்வு அறைகள், உள்ளக சலவை வசதிகள் மற்றும் விரைவில் திறக்கப்படவுள்ள கஃபே ஆகிய பல்வேறு வாழ்க்கைமுறை வசதிகள் உள்ளன. மேலும், இச்செயற்திட்டத்தில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ள ஸ்மார்ட் குடியிருப்பு தொழில்நுட்பம் குடியிருப்பாளர்களின் வசதி மற்றும் வாழ்வு அனுபவத்தை மேம்படுத்துகிறது. 

கொழும்பின் நகர வளர்ச்சி தொடர்ந்து முன்னேறி வரும் நிலையில், வாழ்க்கைமுறை ஈர்ப்பு மற்றும் நீடித்த முதலீட்டு வளர்ச்சி வாய்ப்புகளை வழங்கும் முன்னணி குடியிருப்பு செயற்திட்டமாக TRI- ZEN தன்னை நிலைநிறுத்தியுள்ளது. 

TRI-ZEN குறித்து மேலும் அறிய, www.trizen.lk இணையத்தளத்தைப் பார்வையிடலாம் அல்லது 0702 294 294 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

Comments
0

MOST READ
01
02
03
04
05