Dec 31, 2025 - 05:06 PM -
0
DHL Express நிறுவனம் தனது சரக்குப் போக்குவரத்து வலையமைப்பின் ஊடாக உள்நாட்டு வணிகங்கள் மற்றும் சமூகங்களை உலகளாவிய வாய்ப்புக்களுடன் இணைக்கும் வகையில் முன்னெடுத்துவரும் செயற்பாட்டின் 45 வருடத்தைக் கொண்டாடுகின்றது.
இதுபற்றி நிறுவனத்தின் ஆசிய பசுபிக் பிராந்தியத்துக்கான பிரதம நிறைவேற்று அதிகாரி திரு.கென் லீ கருத்துத் தெரிவிக்கையில், “கடந்த 45 வருடங்களாக DHL Sri Lanka நிறுவனம் வணிகங்கள் மற்றும் சமூகங்களை உலகத்துடன் இணைந்து, வணிகத்தை நோக்கிய முன்னேற்றம் வளர்ச்சி மற்றும் வாய்ப்புக்களை ஏற்படுத்தியுள்ளது. இந்த வருடாந்த நிறைவானது எமது மக்களின் அர்ப்பணிப்பு, வாடிக்கையாளர்களின் நம்பிக்கை மற்றும் DHL இன் உலகளாவிய வலையமைப்பின் பலம் என்பவற்றைக் கொண்டாடுகின்றது. ‘மக்களை இணைத்தல், வாழ்க்கையை மேம்படுத்தல்’ என்ற நோக்கத்தின் அடிப்படையில் எமது பணியாளர்களும், வாடிக்கையாளர்களும் தொடர்ந்தும் செயற்படுவது உறுதிப்படுத்தப்படுகிறது. இலங்கையின் எதிர்காலம் மற்றும் விநியோகத்திற்கான அனுபவத்தை மேம்படுத்த அடுத்த தசாப்தத்தில் முதலீடுகளை மேற்கொள்வதில் DHL உறுதியாக உள்ளது” என்றார்.
DHL Express Sri Lankaஇன் இலங்கைக்கான முகாமையாளர் டிமித்ரி பெரேரா குறிப்பிடுகையில், “கடந்த நான்கு தசாப்தங்களுக்கு மேலாக இலங்கையின் முன்னேற்றத்தில் நாம் உறுதியாக உள்ளோம். எமது வாடிக்கையாளர்கள், பணியாளர்கள் மற்றும் உள்ளூர் சமூகங்களுக்கு சமூகத் தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் புத்தாக்கம், மீள்தன்மை மற்றும் ஆளமான உறுதிப்பாட்டுடனான எமது பயணத்தைப் பறைசாற்றுகிறது. எதிர்காலம் குறித்து நாம் கவனம் செலுத்துகையில், நாம் எதிர்காலத்தை நோக்கும்போது, நிலைபேறான வளர்ச்சி, சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சிகளை வலுப்படுத்துவது மற்றும் இலங்கையை உலகத்துடன் இணைப்பது என்பவற்றின் மீது நாம் கவனம் செலுத்துகின்றோம்” எனத் தெரிவித்தார்.
DHL Express Sri Lanka நிறுவனம் இலங்கையில் முதலாவது சர்வதேச சரக்குப் போக்குவரத்து வழங்குனராக 1980ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. இது 1992ஆம் அண்டு ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் நிறுவனத்துடன் இணைந்த பங்காளராக இணைந்துகொண்டது. இலங்கையின் பொருளாதார வளர்ச்சி, சர்வதேச வர்த்தகம், ஆடை மற்றும் ஈ-வர்த்தகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் உள்ள சிறிய மற்றும் பாரிய வணிகங்களை வலுப்படுத்தல் போன்றவற்றுக்கு தொடர்ந்தும் ஒத்துழைப்பு வழங்குவதில் இந்நிறுவனம் உறுதியாக உள்ளது.
2007ஆம் ஆண்டு அலுவலகத் தொகுதியை நிறுவியதுடன், சர்வதேச ஏற்றுமதிகளை நெறிப்படுத்தல் மற்றும் வினைத்திறனான செயற்பாட்டை ஊக்குவிக்கும் நோக்கில் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வசதிக்கான நுழைவாயிலொன்றை 2008ஆம் ஆண்டு உருவாக்கியது. இலங்கையின் முன்னணியான பிணைக்கப்பட்ட களஞ்சியவசதியைக் கொண்டிருப்பதால் 24 மணித்தியாலங்களிலும் தமது பொருட்களை வெளியெ எடுத்துக் கொள்வதற்கான வசதிகள் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இது தெரிவுசெய்யப்பட்ட சர்வதேச சந்தைக்கான அடுத்த கட்ட விநியோகத்தை மேலும் விஸ்தரிக்கின்றது.
சந்தையில் DHL இன் தலைமைத்துவம் சிறந்த சாதனைகளை அடைந்திருப்பதை கடந்த தசாப்தங்களில் காணக்கூடியதாகவிருந்தது. மேம்படுத்தப்பட்ட டிஜிட்டல் தொழில்நுட்பத்துடன் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த அனுபவத்தை வழங்கும் வகையில் 2021ஆம் ஆண்டு Digital Live Advisor ஆரம்பிக்கப்பட்டது. வாடிக்கையாளர்களின் இறக்குமதி ஏற்றுமதி செயற்பாடுகளை ஒழுங்குபடுத்தும் வகையில் 2022ஆம் ஆண்டு DHL Express Sri Lanka நிறுவனம் பொருட்களை சுங்கத்திலிருந்து வெளியே எடுப்பதற்காகத் தனியான பக்கமொன்றையும் அறிமுகப்படுத்தியிருந்தது.
பல்வேறு துறைகளில் உள்ள வணிகங்களுக்கு சரக்குப் போக்குவரத்தில் ஒத்துழைப்பு மற்றும் நிபுணத்துவத்தை வழங்கும் வகையில் DHL நிறுவனம் கடந்த வருடங்களில் பல்வேறு தொழில்துறை சங்கங்கள் மற்றும் நிறுவனங்களுடன் கூட்டாண்மைகளை ஏற்படுத்தியது. இலங்கையின் டிஜிட்டல் பொருளாதாரத்திற்கு முக்கிய விடயமாக அமையும் ஈ-வர்த்தகத் தீர்வுகள் குறித்தும் நிறுவனம் கவனம் செலுத்தியுள்ளது.
தெரிவுக்குரிய தொழில்வழங்குனர், தெரிவுக்குரிய வழங்குனர், தெரிவுக்குரிய முதலீடு மற்றும் தெரிவுக்குரிய பசுமைமிகு சரக்குப் போக்குவரத்து ஆகிய நான்கு முக்கிய விடயங்களின் அடிப்படையில் DHL Group இன் 2030ஆம் ஆண்டுக்குரிய மூலோபாயக் கொள்கையான :
நிலையான வளர்ச்சியை துரிதப்படுத்தல் என்பதுடன் இணங்கும் வகையில் DHL Express Sri Lankaஇன் உறுதியான பயணம் அமைந்துள்ளது. நிலைப்புத் தன்மை, வாடிக்கையாளர்களை மையமாகக் கொண்ட அணுகுமுறை மற்றும் புத்தாக்கம் போன்றவற்றினால் செயற்பாடுகள் சிறப்பான முறையில் முன்னெடுக்கப்படுவதை நிறுவனம் உறுதிப்படுத்துகிறது. மேம்படுத்தப்பட்ட டிஜிட்டல் தொடுமுனையின் ஊடாக வாடிக்கையார்களுக்கு சிறந்த அனுபவத்தை வழங்கும் வகையில் Digital Live Advisor அறிமுகப்படுத்தப்பட்டது. பொருட்களை வெளியே எடுப்பதற்காக உருவாக்கப்பட்ட MyGTSand பக்கத்தின் மூலம் சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சிகள் வாடிக்கையாளர்களின் ஆவணப்படுத்தல்கள், இறக்குமதி கட்டுப்பாடுகள் மற்றும் வரிக்கொள்கைகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்களை வாடிக்கையாளர்கள் அறிந்துகொள்ள முடியும்.
நிலைத்தன்மையையும் உலகளாவிய சுற்றுச்சூழல் முன்னணித்துவத்தையும் வெளிப்படுத்தும் வகையில், DHL Express Sri Lankaநிறுவனம் 2024 ஆம் ஆண்டு GoGreen Plus சேவையை அறிமுகப்படுத்தியது. இதன் மூலம் விமானப் போக்குவரத்து துறையில் தூய்மையற்ற வாயு வெளியீட்டைக் குறைக்கும் முக்கிய தீர்வாக நிலைத்தன்மை கொண்ட விமான எரிபொருள் (SAF) வழங்கப்படுகிறது. இந்த முயற்சி, 2050க்குள் பச்சைவீட்டு வாயு வெளியேற்றத்தை பூச்சிய நிலைக்குக் கொண்டு செல்வதை இலக்காகக் கொண்ட DHL Group இன் விரிவான காலநிலை பாதுகாப்பு அர்ப்பணிப்பான Mission 2050 உடன் இணங்குகிறது. இது DHL-ஐ துறையின் எதிர்காலத்தை வடிவமைக்கும் முன்னணி சரக்குப் போக்குவரத்து நிறுவனங்களில் ஒன்றாக நிலைநிறுத்துகிறது.
DHL Express நிறுவனம் கைத்தொழில் அபிவிருத்தி சபையுடன் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றில் கைச்சாத்திட்டிருப்பதுடன், சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சிகள், மிகச்சிறிய வணிகங்கள் சர்வதேச வணிகங்களை முன்னெடுப்பதை நோக்காகக் கொண்டு தயாரிக்கப்பட்ட GoTrade திட்டத்தின் கீழ் இலங்கை வர்த்தக சம்மேளனத்துடன் மூலோபாயப் பங்களாராக இணைந்துள்ளது. சுங்கம், நிதியியல் மற்றும் ஈ-வர்த்தகம் போன்ற துறைகளில் பயிற்சிகள் மற்றும் திறன்களைப் பெறும் வகையில் GoTrade திட்டத்தின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்ட செயலமர்வுகளில் 350ற்கும் அதிகமான சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சியாளர்கள் இதுவரை இலங்கையில் பங்கெடுத்துள்ளனர்.
DHL Express Sri Lankaநிறுவனத்தின் அர்ப்பணிப்பு வணிகச் சிறப்பு என்பதையும் தாண்டி, சமூக முதலீட்டின் மூலம் உருவாகும் இந்த முயற்சிகள், முக்கியமான சமூத் தாக்கத்தை ஏற்படுத்தும் சமூகத்தில் நேர்மையான மாற்றத்தை உருவாக்கும் சமூகப் பொறுப்புணர்வை நோக்கி முன்னேறுகிறது. இளம் தலைமுறையினருக்கான வேலை வாய்ப்பு மற்றும் திறன் வளர்ச்சியை மையமாகக் கொண்டு GoTeach திட்டத்தின் கீழ் DHL நிறுவனம் 2018ஆம் ஆண்டு முதல் இணைந்து செயற்பட்டு வருகின்றது. GoHelp திட்டத்தின் கீழ், கடுமையான சூழ்நிலைகளில் DHL எப்போதும் இலங்கைக்கு ஆதரவாக இருப்பதுடன், அதன் அனர்த்த பதிலளிப்பு குழுவின் மூலம் மீட்பு பொருட்கள் மற்றும் மனிதநேய உதவிகளை விரைவாக வழங்குகிறது. 2014ஆம் ஆண்டு ஐக்கிய நாடுக்ள அபிவிருத்தித் திட்டத்தின் கூட்டாண்மையுடன அனர்த்தங்களுக்கு விமான நிலையத்தைத் தயாராக வைத்திருத்தல் தொடர்பான செயலமர்வொன்றை DHL நிறுவனம் ஏற்பாடு செய்திருந்தது. விமானப்போக்குவரத்து மற்றும் சரக்குப் போக்குவரத்துத் துறையில் கொண்டிருக்கும் அனுபவத்தைக் கொண்டு விமான நிலையங்கள் மிக மோசமான சூழ்நிலைகளுக்குத் தயாராக இருப்பதற்கு உதவுவது இதன் நோக்கமாக இருந்தது.
நிறுவனத்திற்குள் பால்நிலை சமத்துவத்தை மேம்படுத்தவும், வலுப்படுத்தும் நோக்கிலும் 2016ஆம் ஆண்டில் DHL Global உடன் இணைந்து பெண்களுக்கான வலையமைப்பை உருவாக்கியது. DHL Express Sri Lankaநிறுவனத்தி “மக்கள் முதன்மை” பண்பாடு மற்றும் செயற்பாட்டுத் சிறப்புத் தன்மை கடந்த பத்து ஆண்டுகளாக தொடர்ந்து பாராட்டுகளைப் பெற்றுள்ளது. 2025 ஆம் ஆண்டில் சமீபத்தில் 11வது முறையாக Great Place to Work சான்றிதழ் பெறப்பட்டிருப்பதுடன், இது பணியாளர்களின் நலன் மற்றும் நிறுவனத்தின் பண்பாடு தொடர்பில் கொண்டிருக்கும் உறுதிப்பாட்டை வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.
அடுத்த தசாப்தத்திற்கான பயணத்தை ஆரம்பித்துள்ள DHL Express Sri Lankaநிறுவனம் புத்தாக்கம், நிலைத்தன்மை மற்றும் உலகப் பொருளதாரத்தில் இலங்கையை ஒன்றிணைப்பதற்கு ஒத்துழைப்பதில் உறுதியாக உள்ளது. தொழில்நுட்பம், நிலைத்தன்மை கொண்ட தீர்வுகள் மற்றும் மனித வள வளர்ச்சியில் செய்யப்படும் முதலீடுகள் மூலம், DHL தொடர்ந்தும் சர்வதேச சரக்குப் போக்குவரத்தில் சிறப்புத்தன்மைக்கான தரநிலையை உருவாக்கிக் கொண்டிருக்கும்.

