Dec 31, 2025 - 11:50 PM -
0
இலங்கை ஆயுர்வேதக் கூட்டுத்தாபனம் வரலாற்றில் தனது அதிகூடிய வருமானத்தை இந்த ஆண்டில் ஈட்டியுள்ளதாக சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
அதற்கமைய, இந்த ஆண்டில் ஆயுர்வேதக் கூட்டுத்தாபனம் 1,660 மில்லியன் ரூபாய் வருமானத்தைப் பதிவு செய்துள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கை ஆயுர்வேத மருந்துக் கூட்டுத்தாபனத்தினால் 2025 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட 7 புதிய தயாரிப்புகளை வெளியிடும் நிகழ்வு, நாவின்ன ஆயுர்வேத மருந்துக் கூட்டுத்தாபன கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ இதனைத் தெரிவித்தார்.
ஆயுர்வேதத் துறை என்பது இந்நாட்டு மக்களின் ஆரோக்கியத்திற்காகச் செயற்பட வேண்டிய, அரசாங்கத்தினால் முதலீடு செய்யப்பட வேண்டிய மற்றும் ஆராய்ச்சி செய்யப்பட வேண்டிய ஒரு துறையாகும் என்றும், அதன் பலன்கள் தொடர்ச்சியாகக் கிடைக்கப்பெற வேண்டும் என்றும் அமைச்சர் அங்கு மேலும் குறிப்பிட்டார்.

