Jan 1, 2026 - 12:01 AM -
0
2026 ஆம் ஆண்டு புதிய வருடம் இன்று (01) நள்ளிரவு பிறந்தது.
உலகில் முதன்முதலில் கிரிபாட்டி (Kiribati) நாட்டில் புத்தாண்டு பிறந்ததைத் தொடர்ந்து, நியூசிலாந்து மற்றும் அவுஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளிலும் புத்தாண்டு பிறந்தது.
அதனைத் தொடர்ந்து இலங்கை உள்ளிட்ட ஆசிய நாடுகளிலும் புத்தாண்டு பிறந்தது.
மக்கள் பல்வேறு கொண்டாட்டங்கள் மற்றும் கண்கவர் நிகழ்வுகளுடன் 2026 புத்தாண்டை வரவேற்றனர்.
புத்தாண்டுப் பிறப்பைக் கொண்டாடுவதற்காக கொழும்பு காலி முகத்திடல் மற்றும் கொழும்பைச் சூழவுள்ள பல பகுதிகளில் பெருமளவிலான மக்கள் திரண்டிருந்ததாக "அத தெரண" செய்தியாளர்கள் தெரிவித்தனர்.
பிறந்துள்ள 2026 புத்தாண்டு அமைதி, மகிழ்ச்சி மற்றும் செழிப்பு நிறைந்த புத்தாண்டாக அமைய "அத தெரண" செய்திப் பிரிவு அனைத்து இலங்கையர்களுக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறது.

