Jan 1, 2026 - 08:16 AM -
0
தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் வெளியிட்டுள்ள சமீபத்திய தரவுகளின்படி, கொழும்பு நுகர்வோர் விலைச்சுட்டெண்ணின் (CCPI) அடிப்படையில் கணக்கிடப்பட்ட பணவீக்க விகிதம், 2025 நவம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில் டிசம்பர் மாதத்திலும் 2.1% ஆக மாற்றமின்றி நிலவுகிறது.
2025 டிசம்பர் மாதத்திற்கான அனைத்துப் பொருட்களுக்குமான கொழும்பு நுகர்வோர் விலைச்சுட்டெண் 195.8 ஆக பதிவாகியுள்ளது. இது 2025 நவம்பர் மாதத்தின் 193.4 சுட்டெண்ணுடன் ஒப்பிடுகையில் 2.4 புள்ளிகள் அதிகரிப்பாகும்.
உணவுப் பிரிவின் ஆண்டுக்கான பணவீக்கம் 2025 நவம்பர் மாதத்தைப் போலவே டிசம்பரிலும் 2.1% ஆக எவ்வித மாற்றமுமின்றி காணப்பட்டது.
அதேவேளை, உணவு அல்லாத பிரிவின் பணவீக்கம் அக்டோபர் மாதத்திலிருந்த 1.7% இலிருந்து டிசம்பரில் 1.8% ஆக அதிகரித்துள்ளது.
2025 டிசம்பர் மாதத்தில், ஆண்டுக்கான பணவீக்கத்திற்கு உணவுப் பொருட்கள் 0.97% பங்களிப்பையும், உணவு அல்லாத பொருட்கள் 1.18% பங்களிப்பையும் வழங்கியுள்ளதாக தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் அறிவித்துள்ளது.

