Jan 1, 2026 - 08:45 AM -
0
2026ஆம் ஆண்டுப் பிறப்பையொட்டி, கிழக்கு மாகாணத்திலுள்ள தேவாலயங்களில் சீரற்ற காலநிலைக்கு மத்தியிலும் நள்ளிரவு விசேட ஆராதனைகள் இடம்பெற்றன.
மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரதான வழிபாட்டு நிகழ்வு மட்டக்களப்பு புளியந்தீவு புனித மரியால் பேராலயத்தில் நடைபெற்றது.
பேராலயத்தின் பங்குத்தந்தை அருட்தந்தை ஜெமில்டன் தலைமையிலான அருட்தந்தையர்களினால் இந்தப் புத்தாண்டு விசேட திருப்பலி பூஜைகள் ஒப்புக்கொடுக்கப்பட்டன.
இந்த விசேட வழிபாட்டின் போது, நாட்டில் நீடித்த சமாதானமும் சாந்தியும் நிலவ வேண்டுமென விசேட பிரார்த்தனைகள் முன்னெடுக்கப்பட்டன.
அத்துடன், அண்மைக்காலமாகப் பாதிப்புகளை ஏற்படுத்தி வரும் இயற்கை அனர்த்தங்களில் இருந்து மக்களைப் பாதுகாக்கவும் இறைவனிடம் வேண்டுதல் செய்யப்பட்டது.
புத்தாண்டு விசேட திருப்பலியைத் தொடர்ந்து, கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் ஆசீர்வாதங்கள் வழங்கப்பட்டன.
மழையுடனான சீரற்ற காலநிலை நிலவியபோதிலும், மட்டக்களப்பின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பெருமளவான கத்தோலிக்கப் பக்தர்கள் இந்தச் சிறப்பு வழிபாட்டில் கலந்துகொண்டனர்.
--

