Jan 2, 2026 - 09:39 AM -
0
100 ஆண்டுகளைப் பூர்த்தி செய்த லயன் குடியிருப்பினை (தொடர் குடியிருப்பு), தோட்டத் தொழிலாளர்கள் நேற்று (01) கேக் வெட்டிக் கொண்டாடியுள்ளனர்.
அக்கரபத்தனை லோவர் கிரேன்லி தோட்டத்தைச் சேர்ந்த 44 குடும்பங்களே, இவ்வாறு தங்களது குடியிருப்பின் 100 ஆவது ஆண்டுத் தினத்தை கொண்டாடினர்.
பாரம்பரிய இசைக்கருவியான தப்பு இசைத்து, கும்மியடித்து, ஒருவருக்கொருவர் இனிப்புகளைப் பகிர்ந்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
குறித்த குடியிருப்பு 1926 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டுள்ளது. "இதில் வாழ்ந்த எமது மூதாதையர்கள் பல தலைமுறைகளைச் சிறந்த நிலைக்குக் கொண்டு வந்துள்ளனர். நாங்கள் அனைவரும் இங்கு மிகவும் மகிழ்வாக வாழ்ந்து வருகிறோம். அந்த நன்றியுணர்வினை வெளிப்படுத்தவே இந்த விழாவினை ஏற்பாடு செய்தோம்" என குடியிருப்போர்கள் தெரிவித்தனர்.
--

