Jan 2, 2026 - 12:37 PM -
0
யாழ்ப்பாணம் - கோண்டாவில் சந்திக்கு அருகாமையில் உள்ள ஹோட்டல் ஒன்றில் கரப்பான் பூச்சியுடன்கூடிய உணவு வழங்கப்பட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
குடும்பம் ஒன்று நேற்று (01) குறித்த ஹோட்டலுக்கு உணவருந்த சென்றுள்ளது. இவ்வாறு சென்றவர்களுக்கு வழங்கிய நூடில்ஸ் உணவில் கரப்பான்பூச்சி இருப்பது அவதானிக்கப்பட்டது.
இந்நிலையில் குறித்த விடயத்தை ஹோட்டல் பணியாளர்களுக்கு எடுத்துக் கூறிய போது அவர்கள் அதை ஏற்றுக்கொள்ள மறுத்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் இது குறித்து சுகாதார பரிசோதகருக்கு அறிவிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
--

