Jan 2, 2026 - 12:56 PM -
0
ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள செங்கலடி வைத்தியசாலை உள்வீதியில் உள்ள வீடு ஒன்றில் நேற்று (01) இரவு 7.00 மணியளவில் 22 வயதுடைய யுவதி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள நிலையில், அதே பொலிஸ் பிரிவிலுள்ள மயிலம்பாவெளி பிரதேசத்தில் ஒரு பிள்ளையின் தந்தையான 22 வயதுடைய நபர் ஒருவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
அவர் மது பாவணைக்கு அடிமையாகி இருந்ததாக கூறப்படுகிறது.
இரு சம்பவ இடத்துக்கு சென்ற திடீர் மரண விசாரணை அதிகாரி எம்.எஸ்.எம். நசீர் விசாரணைகளை மேற்கொண்டு சடலத்தை பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையில் ஒப்படைக்குமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.
இது தொடர்பாக அந்தந்த பொலிஸ் நிலைய பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
இதேவேளை, மட்டக்களப்பு, அரசடியில் உள்ள வர்த்தக நிலையத்திற்கு முன்பாக 21 வயதுடைய இளைஞன் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
கொழும்பிலிருந்து, அக்கரைப்பற்று நோக்கி செல்வதற்காக சென்றிருந்த நிலையிலேயே அவர் இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.
இச்சம்பவம் குறித்து மட்டக்களப்பு தலைமையகப் பொலிஸாரும், தடயவியல் பிரிவு பொலிஸாரும் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
நேற்று (01) திகதி இரவு 7.00 மணியில் இருந்து இன்று (02) அதிகாலை 6.00 மணி வரை மட்டக்களப்பில் 3 பேர் தற்கொலை செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
--

