Jan 2, 2026 - 01:58 PM -
0
கண்டி மாநகரசபை ஏற்கனவே அறிவித்திருந்தமைக்கு அமைய, கண்டி நகரில் உள்ள சட்டவிரோத நடைபாதை வியாபாரிகளை அகற்றும் நடவடிக்கை இன்று (02) காலை முன்னெடுக்கப்பட்டது.
எவ்வாறாயினும், தமக்கு மாற்றீடாக வழங்கப்பட்டுள்ள இடத்தில் வியாபாரம் செய்ய முடியாத நிலை காணப்படுவதாக நடைபாதை வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
கண்டி நகரில் உள்ள சட்டவிரோத நடைபாதை வியாபாரிகள் அகற்றப்படுவார்கள் என கண்டி மாநகரசபை கடந்த ஜூலை மாதம் முதல் அறிவித்து வந்தது.
அதன்படி, கண்டி நகரம் மட்டுமன்றி பேராதனை மற்றும் கட்டுக்கஸ்தோட்டை நகரங்களிலும் உள்ள சட்டவிரோத நடைபாதை வியாபாரிகளை அகற்றும் நடவடிக்கை, மாநகர ஆணையாளர் இந்திகா குமாரி அபேசிங்க, மாநகரசபை அதிகாரிகள் மற்றும் பொலிஸாரின் தலையீட்டுடன் இன்று காலை இடம்பெற்றது.
இருப்பினும், தமக்கு மாற்றீடாக போகம்பறை பகுதியில் ஒரு இடம் வழங்கப்பட்ட போதிலும், அந்தப் பகுதி மக்கள் நடமாட்டம் இல்லாத பகுதி என வியாபாரிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.

