உலகம்
ஆப்கானிஸ்தானில் பலத்த மழை!

Jan 2, 2026 - 02:07 PM -

0

ஆப்கானிஸ்தானில் பலத்த மழை!

ஆப்கானிஸ்தானின் ஹெராத், கந்தஹார், ஹெல்மண்ட் உள்ளிட்ட பல மாகாணங்களில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. கனமழையால் அங்கு திடீரென்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் வீடுகளை வெள்ளம் சூழ்ந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. 

ஹெராத் மாகாணத்தின் கப்கான் மாவட்டத்தில் ஒரு வீட்டின் கூரை இடிந்து விழுந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உயிரிழந்தனர். கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கியும், மின்சாரம் தாக்கியும் இதுவரை 17 பேர் பலியாகியுள்ளனர். 11 பேர் படுகாயமடைந்துள்ளனர். 1,200 இற்கும் மேற்பட்ட கால்நடைகள் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி தெரிவிக்கின்றன. 

ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளன. வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணி நடந்து வருகிறது. கனமழை - வெள்ளம் காரணமாக நாட்டின் மத்திய, வடக்கு, தெற்கு மற்றும் மேற்குப் பகுதிகள் முழுவதும் கடுமையாக பாதிப்புக்குள்ளாகி உள்ளன என்று ஆப்கானிஸ்தானின் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் செய்தித் தொடர்பாளர் முகமது யூசுப் ஹம்மாத் தெரிவித்தார்.

Comments
0

MOST READ
01
02
03
04
05