Jan 2, 2026 - 02:56 PM -
0
நடிகர் யோகி பாபு காமெடியனாக ஏராளமான படங்களில் நடிப்பது மட்டுமின்றி ஹீரோவாகவும் சில படங்களில் நடிக்கிறார். ஆனால் நான் எப்போதும் காமெடியன் தான் என பேட்டிகளில் மட்டுமே பேசுவார் யோகி பாபு.
கடந்த பல வருடங்களாக தமிழ் சினிமாவில் நம்பர் 1 காமெடியனாக யோகி பாபு தான் வலம் வருகிறார். பல முன்னணி ஹீரோக்களின் படங்களிலும் அவர் காமெடியனாக நடித்து வருகிறார் அவர்.
இந்நிலையில் யோகி பாபு 300 படங்கள் என்கிற பிரம்மாண்ட மைல்கல்லை கடந்து இருக்கிறார். அவரது 300 படத்திற்கு அர்ஜுனன் பேர் பத்து என டைட்டில் வைத்து இருக்கின்றனர்.
இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை விஜய் சேதுபதி வெளியிட்டு இருக்கிறார்.

