Jan 2, 2026 - 03:37 PM -
0
தமிழில் தான் நடிக்கும் படங்களின் புரமோஷன் நிகழ்வுகளில் கலந்துகொள்ளாத நடிகை நயன்தாரா, தெலுங்கு படத்தின் புரமோஷனில் மட்டும் கலந்துகொண்டது குறித்து ரசிகர்கள் சமூக வலைதளங்களில் விமர்சித்து வருகின்றனர்.
நயன்தாரா நடிப்பில் தமிழில் ‘மூக்குத்தி அம்மன் 2’ படத்தின் படப்பிடிப்பு அண்மையில் நிறைவடைந்தது. வரும் சங்கராந்தி பண்டிகையை முன்னிட்டு சிரஞ்சீவி உடன் நயன்தாரா நடித்துள்ள ‘மன ஷங்கர வரபிரசாத காரு’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகிறது. இந்தப் படத்தை ஷைன் ஸ்கீரின்ஸ் என்டர்டெயின்மென்ட்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
அனில் ரவிபுடி இந்தப் படத்தை இயக்கியுள்ளார். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இந்தத் திரைப்படம் திரையரங்குகளில் வரும் ஜன.12 ஆம் திகதி வெளியாக இருக்கிறது. இந்நிலையில், இந்தப் படத்துக்கான புரமோஷனில் நடிகை நயன்தாரா நடித்துள்ளார். இது தொடர்பான வீடியோவும் வெளியாகியுள்ளது.
தமிழில் நயன்தாரா நடிக்கும் படங்களை விளம்பரப்படுத்தும் பணிகளில் நயன்தாரா கலந்துகொள்வதில்லை. ஆனால், தெலுங்கில் மட்டும் புரமோஷன் பணிகளில் ஈடுப்பட்டது ஏன்? என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். மறுபுறம் அஜித்தை போல, அது நயன்தாராவின் தனிப்பட்ட விருப்பம் போன்ற கருத்துகளும் சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்டுள்ளன.

