Jan 2, 2026 - 03:55 PM -
0
கடந்த வாரம் திரைக்கு வந்து மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்ற திரைப்படம் சிறை. அறிமுக இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரி இயக்கத்தில் உருவான இப்படத்தில் விக்ரம் பிரபு ஹீரோவாக நடித்திருந்தார்.
எல்.கே. அக்ஷய் குமார் இப்படத்தில் நடிகராக அறிமுகமாக, அனிஷ்மா அனில்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
இப்படத்தின் வசூல் குறித்து தொடர்ந்து ஒவ்வொரு நாளும் பார்த்து வருகிறோம். இந்த நிலையில், 8 நாட்களில் சிறை திரைப்படம் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
உண்மை சம்பவத்தை மையமாக கொண்டு உருவான இப்படம் உலகளவில் 8 நாட்களில் 12+ கோடி ரூபா வசூல் செய்து, பிளாக்பஸ்டர் ஹிட்டாகியுள்ளது.

