Jan 4, 2026 - 05:16 PM -
0
உணவுச் சட்டத்தின் 32 வது பிரிவின் கீழ் உள்ள சில விதிமுறைகள் அமுலாகும் திகதியை ஒத்திவைக்க சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
உணவு ஆலோசனைக் குழுவுடன் கலந்தாலோசித்த பின்னர், சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அதற்கமைய, 2023 பெப்ரவரி 14 ஆம் திகதி அதிவிசேட வர்த்தமானி மூலம் வெளியிடப்பட்ட உணவுச் சட்டத்தின் சில விதிமுறைகளை அமுல்படுத்துவதை, எதிர்வரும் ஜூலை 01 ஆம் திகதி வரை ஒத்திவைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.
உணவு லேபளிடல் மற்றும் விளம்பரப்படுத்தல் விதிமுறைகள், திரவ உணவுகளில் சீனி அளவிற்கான நிறக்குறியீட்டு விதிமுறைகள், உணவிற்கான உப்பு அயடின்கலத்தல் தொடர்பான விதிமுறைகள் மற்றும் ட்ரான்ஸ் கொழுப்பு தொடர்பான விதிமுறைகள் ஆகியவற்றை அமுல்படுத்தல் ஜூலை 01 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் என சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சு தெரிவித்துள்ளது.

