செய்திகள்
வெனிசுலா மீதான அமெரிக்க ஆக்கிரமிப்புக்கு இந்தியா கவலை

Jan 4, 2026 - 05:59 PM -

0

வெனிசுலா மீதான அமெரிக்க ஆக்கிரமிப்புக்கு இந்தியா கவலை

தலைநகர் கராகஸில் அமெரிக்க சிறப்புப் படையினர் மேற்கொண்ட வான்வழித் தாக்குதலின் மூலம், வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவி சிலியா புளோரஸ் ஆகியோரைக் கைது செய்த சம்பவத்திற்கு இந்தியா கவலை தெரிவித்துள்ளது. 

வெனிசுலாவில் ஏற்பட்டுள்ள விடயங்கள் கவலைக்குரியவை என்றும், அந்த சூழ்நிலையை தொடர்ந்தும் உன்னிப்பாகக் கவனித்து வருவதாகவும் இந்தியா அறிவித்துள்ளது. 

வெனிசுலா மக்களின் நலன் மற்றும் பாதுகாப்பிற்கான தமது ஆதரவை இந்தியா மீண்டும் உறுதிப்படுத்துவதாக இந்திய வௌியுறவுத் துறை அமைச்சு வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பிராந்தியத்தின் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை உறுதி செய்யும் வகையில், சம்பந்தப்பட்ட அனைவரும் பேச்சுவார்த்தை மூலம் அமைதியான முறையில் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண வேண்டுமென நாங்கள் கேட்டுக்கொள்கிறோம். 

கராகஸில் உள்ள இந்தியத் தூதரகம் அங்குள்ள இந்திய சமூகத்தினருடன் தொடர்பில் இருப்பதாகவும், சாத்தியமான அனைத்து உதவிகளையும் தொடர்ந்து வழங்கும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது. 

பல மாத கால அச்சுறுத்தல்கள் மற்றும் அழுத்தங்களுக்குப் பின்னர், சனிக்கிழமையன்று அமெரிக்கா வெனிசுலா மீது குண்டுவீசித் தாக்குதல் நடத்தி, அந்நாட்டின் இடதுசாரித் தலைவரான மதுரோவைப் பதவியிலிருந்து கவிழ்த்தது. 

அவர் நியூயோர்க்கில் விசாரணைக்கு உட்படுத்தப்படுவதற்காக நாடு கடத்தப்பட்டுள்ளார்.

Comments
0

MOST READ
01
02
03
04
05