Jan 4, 2026 - 06:55 PM -
0
சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘பராசக்தி’ திரைப்படத்தின் ட்ரெய்லர் இன்று (4) மாலை வௌியாகியுள்ளது.
எதிர்வரும் தைப்பொங்கலை முன்னிட்டு உலகளவில் எதிர்வரும் 10 ஆம் திகதி இந்தப் படம் திரைக்கு வரவுள்ளது.
சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா, ராணா, பசில் ஜோசப் ஆகியோர் நடிப்பில் குறித்த படம் உருவாகியுள்ளது.
ஜி.வி.பிரகாஷ் குமார் இந்தப்படத்திற்கு இசையமைத்துள்ளார். 1960ல் நடைபெற்ற ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தை மையமாக கொண்ட கதையில் உருவாகி இருக்கும் இந்த படத்தின் கதை குறித்து சர்ச்சைகள் எழுந்து நீதிமன்றத்திற்கு சென்றது.
என்றாலும் படத்தின் ரிலீஸ்க்கு நீதிமன்றம் தடை விதிக்கவில்லை.
அதனால் திட்டமிட்டபடி ஜனவரி 10ம் திகதி இப்படம் திரைக்கு வரவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

