செய்திகள்
தெஹிவளையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

Jan 4, 2026 - 07:08 PM -

0

தெஹிவளையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

தெஹிவளை பகுதியில் உள்ள வேலைத்தளம் ஒன்றிற்கு முன்னால் நபர் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. 

தாக்குதல் நடத்தப்பட்டதன் காரணமாக இந்த மரணம் சம்பவித்திருக்கலாம் எனப் பொலிஸார் சந்தேகிக்கின்றனர். 

சடலமாக மீட்கப்பட்டவர் தெஹிவளை, சஞ்சயபுர பகுதியைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். 

சம்பவம் தொடர்பான நீதவான் விசாரணைகளை கல்கிசை பதில் நீதவான் கீத்ம பெர்னாண்டோ மேற்கொண்டுள்ளார்.

Comments
0

MOST READ
01
02
03
04
05