Jan 4, 2026 - 11:53 PM -
0
வெனிசுலா மீதான வொஷிங்டனின் நடவடிக்கைகளுக்குச் சந்தேகத்திற்கு இடமின்றி இலங்கை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க எதிர்ப்புத் தெரிவிப்பார் என தாம் நம்புவதாக சர்வஜன அதிகாரம் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான திலித் ஜயவீர தெரிவித்துள்ளார்.
அவர் தமது எக்ஸ் கணக்கில் இது தொடர்பில் தெரிவித்துள்ளதாவது,
வெனிசுலா மீதான வொஷிங்டனின் நடவடிக்கைகளுக்குச் சந்தேகத்திற்கு இடமின்றி இலங்கை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க எதிர்ப்புத் தெரிவிப்பார்.
ஒரு இறையாண்மையுள்ள நாட்டிற்கு எதிராக அமெரி்க்க ஜனாதிபதி ட்ரம்ப் மேற்கொண்டுள்ள இந்த ஜனநாயக விரோத நடவடிக்கைக்கு எதிராக, அநுர குமார திசாநாயக்க ஒரு துணிச்சலான நிலைப்பாட்டை எடுக்கும்போது, அவருக்கு தமது நிபந்தனையற்ற ஆதரவை வழங்குவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

